டேராடூன், ஜூலை 19 மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆன பின்பு மணிப் பூர் மாநிலத்தைப் போன்று மற்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் வகுப்புவாத வன்முறை நிகழ்வுகள் தீவிரமடைந்து வருகின்றன. 3 நாட்களுக்கு முன் பாஜக கூட்டணி ஆளும் மகாராட்டிராவின் கோலாப்பூரில் பாஜக தலைமையிலான ஹிந்துத்துவா குண்டர்கள் மசூதி மீது தாக்கு தல் நடத்தியும், முஸ்லிம் மக்களின் வீடுகளை தீவைத்தும் கொளுத்தினர்.
இந்நிலையில், பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில் கிருத்துவ பிரார்த்தனைக் கூட்டத்தில் ஹிந்துத்துவா குண்டர்கள் தாக்கு தல் நடத்திய நிகழ்வு அரங்கேறியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தராகண்ட் தலைநகர் டேராடூனின் நேரு காலனியில் கடந்த ஜூலை 14 அன்று ராஜேஷ் பூமி என்ற பாதிரியார் முன்னிலையில் ஒரு வீட்டில் கிருத்துவ பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரரும், ஆர்எஸ்எஸ் குண்டருமான தேவேந்திர டோபால் தலைமையிலான ஹிந்துத்துவா கும்பல், ”இங்கு மதமாற்றம் நடைபெறுகிறது. அதனால் இனிமேல் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தக் கூடாது” என மிரட்டி யுள்ளது.
“நாங்கள் யாரையும் மதமாற்றம் செய்யவில்லை. அமைதியாக பிரார்த்தனைக் கூட்டம் நடத்துகிறோம். உங்களுக்கு என்ன பிரச்சினை. நீங்கள் யார்? எங்களை பிரார்த்தனைக் கூட்டம் நடத்தக் கூடாது என சொல்வதற்கு?” என பாதிரியார் ராஜேஷ் பூமி கேள்வி எழுப்பி மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே ஹிந்துத்துவா குண்டர்கள் பாதிரியார் ராஜேஷ் பூமி உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தியது.
உயிருக்குப் பயந்து கிறிஸ்தவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிய நிலை யில், வீடுகளின் மீதும் ஹிந்துத்துவா குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் பாதிரி யார் ராஜேஷ் உட்பட 7 பேர் காய மடைந்த நிலையில், வீடு முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டன.
குழந்தைகளிடம் பாலியல் சீண்டல் –
தாக்குதல்
பிரார்த்தனைக் கூட்டத்தில் இருந்த குழந்தைகளிடம் ஹிந்துத்துவா குண்டர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். என்ன நடக்கிறது என்று புரியாமல் நிகழ்விடத்தை விட்டு ஓட முயற்சித்த குழந்தைகளை ஹிந்துத்துவா கும்பல் தலையில் அடித்து தாக்குதல் நடத்தியுள்ளது.
கைது நடவடிக்கை இல்லை
இந்நிகழ்வு தொடர்பாக பாதிரியார் ராஜேஷ், நேரு காலனி காவல் நிலை யத்தில் புகார் அளித்த நிலையில், 11 பேர் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரார்த்தனைக் கூட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் தேவேந்திர டோபல், பிஜேந்திர தாபா, சதிர் தாபா, சஞ்சீவ் பால், சுதிர் பால், திரேந்திர தோபால், அர்மன் தோபால், ஆர்யமான் தோபால், அனில் இந்து, பூபேஷ் ஜோஷி மற்றும் பிஜேந்திரா என அடையாளம் காணப்பட்டும் அவர்களை கைது செய்யாமல் காவல்துறையினர் ஹிந்துத்துவா கும்பல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதமாற்றம் நடைபெறவில்லை
நேரு காலனி காவல் நிலைய ஆய்வாளர் சத்பீர் சிங் நியூஸ்லாண்ட்ரிக்கு அளித்த பேட்டி யில், “கிருத்துவ பிராத்தனைக் கூட்டத்தில் எந்த மத மாற்றமும் நடைபெறவில்லை. ஹிந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள், கிருத்துவ குடும்ப உறுப்பினர்களிடம் தவறாக நடந்து கொண்டு அவர்களது வீட்டை நாசப்படுத்தியுள்ளனர்” என அவர் கூறினார்