சென்னை, ஜூலை 13 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் –மேற்கொண்டுள்ள அய்ந்து குழுவினருக்கும் தமிழ்நாடெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.
செய்தி விவரம் வருமாறு:
தாராபுரம் நான்காம் குழுவின் பரப்புரைப் பயணம்
பொள்ளாச்சி
நீட் எதிர்ப்பு வாகன பரப்புரை பயணத்தில் தாராபுரம் நான்காம் குழுவின் பரப்புரை பொள்ளாச்சி நகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சி.மாரிமுத்து தலைமை தாங்கினார்.
வழக்குரைஞர் இமயவர்மன், வழக்குரைஞர் பிரபாகரன், பொறியாளர் பரமசிவம், மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், தாராபுரம் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் செழியன், மாவட்டத் துணைச் செயலாளர் சிவராஜ், மாவட்ட அமைப்பாளர் சு.ஆனந்தசாமி, நகரச் செயலாளர் அர.நாகராஜ், மாவட்ட மாணவர் கழக செயலாளர் வி.வருண், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வின்சென்ட், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரவீன்குமார் உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் கி.கதி ரேசன், அஜித் குமார், சுரேஷ், வழக்குரைஞர் பிரபாகரன் உள்ளிட்ட தோழர்கள் பரப்புரைப் பயணத்திற்கு ஆதரவு தந்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பரப்புரைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
பரப்புரைப் பயணத்தில் கழக சொற்பொழிவாளர் த.மு.யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார்.
பயணத்தில் பங்கேற்றுள்ள தோழர்களுக்கு பொள்ளாச்சி நகர திராவிட கழகம் சார்பில் பயனடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
கோவை கழக மாவட்டம் – சுந்தராபுரம்
கோவை கழக மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் மாவட்ட தலைவர் மா.சந்திரசேகர் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ஆ.பிரபாகரன், மாவட்ட மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, நகரத் தலைவர் செந்தில்நாதன், மகளிர் பாசறை கவிதா, குரு, நிலக்கடை செல்வம், இருதய ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் ஒன்றிய அரசு, மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாநிலத் துணைச் செயலாளர் காளிமுத்து, தெற்கு பகுதி செயலாளர் குமரேசன், மற்றும் தமிழ்முரசு, வெங்கடேஷ், வெற்றிச்செல்வன்,சிவக்குமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பரப்புரைப் பயணத்தை தொடங்கி வைத்தார்.
பரப்புரைப் பயணத்தில் கழக சொற்பொழிவாளர் த.மு.யாழ்திலீபன் சிறப்புரையாற்றினார்.
கோவை கழக மாவட்டம்– உக்கடம்
கோவை கழக மாவட்டம் உக்கடம் பகுதியில் மா.சந்திரசேகர் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்.
ஆ.பிரபாகரன் மாவட்ட செயலாளர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, நகரத் தலைவர் செந்தில்நாதன், மகளிர் பாசறை கவிதா, குரு, நிலக்கடை செல்வம், இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் ஒன்றிய அரசு, மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாநிலத் துணைச் செயலாளர் காளிமுத்து, தெற்கு பகுதி செயலாளர் குமரேசன் மற்றும் தமிழ் முரசு,காரமடை ராஜா, வெங்கடேஷ், வெற்றிச்செல்வன், சிவக்குமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பரப்புரை பயணத்தை தொடங்கி வைத்தார்.
பரப்புரைப் பயணத்தில் கழக சொற்பொழிவாளர் த.மு.யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார்.
கோவை கழக மாவட்டம்- புளியகுளம்
கோவை கழக மாவட்டம் புளியகுளம் பகுதியில் மா.சந்திரசேகர் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்.
ஆ.பிரபாகரன் மாவட்ட செயலாளர், மாவட்ட மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, நகரத் தலைவர் செந்தில்நாதன், மகளிர் பாசறை கவிதா, குரு, நிலக்கடை செல்வம், இருதய ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் ஒன்றிய அரசு, மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாநிலத் துணைச் செயலாளர் காளிமுத்து, தெற்கு பகுதி செயலாளர் குமரேசன் மற்றும் தமிழ்முரசு, வெங்கடேஷ், வெற்றிச்செல்வன்,சிவக்குமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் பரப்புரை பயணத்தை தொடங்கி வைத்தார்.
கழகப் பேச்சாளர் புளியகுளம் வீரமணி தொடக்க வுரையாற்றினார்.
பரப்புரைப் பயணத்தில் கழக சொற்பொழிவாளர் த.மு.யாழ்திலீபன் சிறப்புரையாற்றினார்.
‘‘நீட் எதிர்ப்பு பரப்புரை ஏன்?’’ என்ற புத்தகங்களை திமுக கவுன்சிலர் முனியம்மாள் பாலமுருகன் மற்றும் திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் கலைச்செல்வி ஆகியோர் கோவை மாவட்ட தலைவர் சந்திரசேகர் அவர்களிடமிருந்து 50 புத்தகங்கள் பெற்றுக்கொண்டார்.
கன்னியாகுமரி: முதல் குழுவின் பரப்புரைப் பயணம்
வள்ளியூர்
நீட் எதிர்ப்பு இருசக்கர ஊர்தி பரப்புரைப் பயணம் கன்னியாகுமரியில் மிகுந்த எழுச்சியோடு தொடங்கி வள்ளியூர் வருகை தந்த நீட் எதிர்ப்பு பரப்புரைப் பயணக் குழுவினருக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் நம்பி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சாமியானா பந்தல் அமைத்து,இருமருங்கிலும் கழகக்கொடிகளை கம்பீரமாக பறக்கச் செய்திருந்தார்கள்
குழுத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் உள்ளிட்ட அனைத்துத் தோழர்களுக்கும், வள்ளியூர் பேரூராட்சி தலைவர் உறுப்பினர்கள் சார்பில் பயனாடை போர்த்தப்பட்டது. அனைவருக்கும் வடை,மோர், குளுக்கோஸ், வழங்கப்பட்டது.
வள்ளியூர் ப.க.தலைவர் த.குணசீலன் வரவேற்றார். வள்ளியூர் ப.க. துணைத்தலைவர் சு.வெள்ளைப்பாண்டி அறிமுகவுரையாற்றினார்.
மாவட்ட மதிமுக செயலாளர் உவரி எம்.ரெமண்ட், மாவட்ட திமுக துணைச்செயலாளர் நம்பி ஆகியோர் உரைக்குப் பின், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் உரையாற்றினார். வள்ளியூர் நகர கழக செயலாளர் பெ.நம்பிராசன் நன்றி கூறினார். வள்ளியூர் பேரூர் கழக செயலாளர் ராதாகிருஷ்ணன் திமுக பொறுப்பாளர்கள்
எஸ்.எம்.ஏ.கென்னடி. மு.சங்கர் கு.அன்பரசு மாணிக்கம் கார்த்திக் சுபாஸ் ஆபிரகாம். கி.சுரேசு வள்ளியூர் நகர பகுத்தறிவாளரர் கழக செயலாளர் எ.எம்.சத்யன் வள்ளியூர் நகர ப.க. துணைச் செயலாளர் இ.மோகனசுந்தர் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். நீட் எதிர்ப்பு கழக புத்தகங்களை ரூ.1,000/கொடுத்து மாவட்ட திமுக துணை செயலாளர் வெ.நம்பி பெற்றுக்கொண்டார்.
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் 11.7.2024 மதியம் 3 மணி அளவில் திருநெல்வேலி வள்ளியூர் பகுதியில் பிரச்சார பரப்புரைப் பயணம் நடைபெற்றது.
பயணத்தினை திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தாநாடு இரா.குணசேகரன் தொடங்கி வைத்தார். இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் குணசீலன் வரவேற்புரை ஆற்றினார். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட செயலாளர் டைமண்ட் மதிமுக ராதாகிருஷ்ணன், திரா விட முன்னேற்றக் கழக மாவட்ட துணை செயலாளர் நம்பி மற்றும் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். நம்பி ராஜன் நன்றி உரையாற்றினார்.
நாகர்கோயிலில்…
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் 11.7.2024 அன்று மதியம் 12 மணி அளவில் நாகர்கோவில் ஸ்டேடியம் பகுதியில் பிரச்சார பரப்புரைப் பயணம் நடைபெற்றது. பயணத்தினை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு
இரா.குணசேகரன் தொடங்கி வைத்தார். இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன் அவர்களும், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் நல்லபெருமாள் வரவேற்புரை ஆற்றினார். பொதுக்குழு உறுப்பினர் தயாளன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்க உரையாற்றினார். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் சிறப்புரை ஆற்றினார். கழகக் காப்பாளர் பிரான்சிஸ்,திராவிட கழக பொதுக்குழு உறுப்பினர் மா.மணி,மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.ரமேஷ், மாநகர செயலாளர் மு.ராஜசேகர், கோட்டார் பகுதி தலைவர் ச.மணிமேகலை, தொழிற்சங்க அமைப்பாளர் இளங்கோ மற்றும் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். கிளைத் தலைவர் கென்னடி நன்றி உரையாற்றினார்.