பிரதமர் நரேந்திர மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் வேலையின்மை அதிகரிப்பு பன்னாட்டு வங்கி அறிக்கையை குறிப்பிட்டு காங்கிரஸ் குற்றச்சாட்டு

2 Min Read

புதுடில்லி, ஜூலை 8- பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் இந்தியா வில் வேலையின்மை அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவில் வேலை யின்மை அதிகரித்து வருவதாக சிட்டிகுரூப் எனப்படும் சர்வதேச வங்கி ஒன்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தாலும் போதிய வேலை இருக்காது என்றும், இது வேலையில்லா வளர்ச்சி என்றும் அதில் குறிப்பிட்டு இருக்கிறது.இதை சுட்டிக்காட்டி மத்திய அரசை காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் வேலை யின்மை நெருக்கடி குறித்து காங்கிரஸ் கட்சி குறைந்தது கடந்த 5 ஆண்டுகளாகவே எச்சரித்து வருகிறது. துக்ளக் நிர்வாக பணமதிப்பு நீக்கம், அவசர கோல ஜி.எஸ்.டி. அமல், சீன இறக்குமதி அதிகரிப்பு ஆகியவற்றால் வேலைவாய்ப்பை உரு வாக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறையை சீரழித்ததால் வேலையின்மை நெருக்கடி தீவிரமடைந்தது.

பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கை பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது. உயிரியல் அடிப்படையில் பிறக்காத பிரதமர் நாட்டின் வேலையில்லா திண்டாட்ட விகிதத்தை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்த்தி விட்டார். பட்ட தாரிகள் மத்தியிலான வேலையில்லா திண்டா ட்ட விகிதம் 42 சதவீதமாக உள்ளது.

உயிரியல் அடிப்படை யில் பிறக்காத பிரதம ரின் அரசின் கீழ் 7 சதவீத பொருளாதார வளர்ச்சி கூட நமது இளைஞர்களுக்கு போது மான வேலைகளை உரு வாக்காது. நாம் சராசரியாக 5.8 சதவீத பொருளாதார வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளோம். தோல்வி யடைந்த மோடி பொருளாதாரம்தான் வேலையில்லாத் திண் டாட்டத்திற்கு அடிப்ப டைக் காரணம்.

10 லட்சம் ஒன்றிய அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை கூட நமது படித்த இளைஞர்கள் பெறுவதற்கு அரசு தடையாக உள்ளது. நாட்டின் உழைக்கும் வர்க்கத்தில் வெறும் 21 சதவீதத்தினர் மட்டுமே மாத ஊதியதாரர்களாக உள்ளனர். இது கொ ரோனாவுக்கு முந்தைய 24 சதவீதத்தை விட குறைவாகும்.

கிராமப்புற மக்களின் உண்மையான ஊதியம் ஆண்டுக்கு 1 முதல் 1.5 சதவீதம் வரை சரிகிறது. கிராமப்புற இந்தியர்களை மோடி ஏழைகளாக மாற்றி வருகிறார். மோடி அரசின் மிகைப்படுத்தப்பட்ட திட்டங்கள் களத்தில் எந்த பலனையும் கொடுக்கவில்லை எனக் கூறியுள்ள சிட்டிகுரூப் அறிக்கை, அவற்றில் சீர்திருத்தம் செய்ய பரிந்துரைத்து இருக்கிறது.

திறன் இந்தியா திட்டம் முற்றிலும் தோல்வி யடைந்திருப்பதாகவும், அதன் மூலம் 4.4 சதவீதம் இளைஞர்கள் மட்டுமே எந்தவொரு பயிற்சியும் பெற்றிருப்பதாகவும் கூறுப்பட்டு இருக்கிறது.

இதைப்போல முத்ரா மற்றும் சுவநிதி திட்டங்களும் சிறு வணிகர்களுக்கு கடன் கொடுக்க தவறிவிட்டன. கட்டுமான துறையில் அதிக வேலைகளை உரு வாக்க வேண்டும். அரசு பெரிய அளவிலான சமூக வீட்டுத் திட்டத்தைத் தொடங்க வேண்டும்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *