நடக்க இருப்பவை

3 Min Read

 22.8.2023 செவ்வாய்க்கிழமை

அறிவியல் மனப்பான்மை நாள் 

விளக்கக் கூட்டம்

திருவாரூர்: மாலை 6:00 மணி * இடம்: காந்தி சாலை புலிவலம் ரவுண்டானா அருகில், திருவாரூர் * வரவேற் புரை: க.அசோக்ராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்), தலைமை: ஆர்.ஈவேரா (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திருவாரூர்) * முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), வீ.மோகன் (மாவட்ட தலைவர்), 

இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், ப.க. ஆசிரியரணி), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்), பேரா.சுடர் வேந்தன் – மந்திரமா! தந்திரமா!! * கருத்துரை: க.வீரையன் (மாநில விவசாய அணி செயலாளர்), கி.அருண்காந்தி (மாவட்ட துணைத் தலைவர்), கோ.இராமலிங்கம் (மாவட்ட துணை செயலாளர்) * நன்றியுரை: ரெ.புகழேந்தி (மாவட்ட ப.க. து.தலைவர்) * இவண்: பகுத்தறிவாளர் கழகம், திருவாரூர் மாவட்டம்.

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம்

அறியாமை இருளை நீக்குவோம்

தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

திண்டுக்கல்: மாலை 6:00 மணி * இடம்: சிண்டி கேட் வங்கி அருகில், நாகல் நகர், திண்டுக்கல் * தலைமை: பெ.அறிவுடை நம்பி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: தி.க.செல்வம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன் னிலை: வழக்குரைஞர் கொ.சுப்ரமணியம், மயிலை நா.கிருஷ்ணன் (பெரியார் சுயமரியாதை பிரச்சாரக்குழு உறப்பினர்), இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன் (மாவட்ட செயலாளர்), மு.நாகராசன் (பேரவைச் செயலாளர், தி.தொ.க.), இரா.நாராயணன் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்), நா.கமல்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.சக்தி சரவணன்(மாவட்ட இளைஞரணித் தலைவர்), மு.பாண்டியன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * நன்றியுரை: வி.இராமசாமி (நகரச் செயலாளர்) * இவண்: பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல் மாவட்டம்.

23.8.2023 புதன்கிழமை

இரா.கோதண்டபாணி இரண்டாமாண்டு நினைவு நாள் – வீரவணக்கக் கூட்டம்

சிக்கவலம்: மாலை 5:00 மணி * இடம்: இராமர் மடத் தெரு, சிக்கவலம்  * வரவேற்புரை: கோ.செந்தமிழ்ச்செல்வி (திருவாரூர் மாவட்டத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) * முன்னிலை: வடவூர் இராஜேந்திரன் (நாகை ஒன்றியச் செயலாளர் (வ) தலைமைச் செயற்குழு உறுப்பினர்), கே.முத்துராமன் (மாவட்ட பிரதிநிதி, திமுக), * என்.பன்னீர்செல்வம் (ஊராட்சி மன்ற தலைவர், தேமங்கலம்)  * பாவா.ஜெயக்குமார் (மாவட்ட துணைத் தலைவர், தி.க.) * தொடக்கவுரை: ஜெ.புபேஷ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * இணைப்புரை: இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் ஆசிரியரணி) * சிராங்குடி – புலியூர் உதவிபெறும் தொடக்கப் பள்ளிக்கு நலத்திட்டங்கள் வழங்கி உரை: இரா.மாரிமுத்து (நாகை நகர் மன்ற தலைவர், நகர திமுக செயலாளர்), * தேமங்கலம் குழந்தைகள் மய்யத்திற்கு நலத்திட்டங்கள் வழங்கி உரை: ஆர்.ஏ.டி. அண்ணாதுரை (மாவட்ட ஊராட்சி உறுப்பினர், நாகை மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு கலை இலக்கிய அணி), * சிராங்குடி குழந்தைகள் மய்யத்திற்கு நலத்திட்டங்கள் வழங்கி உரை: என்.ஆனந்த் (நாகை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்)  * மூன்றாம் வாய்க்கால் குழந்தைகள் மய்யத் திற்கு நலத்திட்டங்கள் வழங்கி உரை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) * பெரியார் பெருந்தொண்டர் இரா.கோதண்டபாணி அவர் களின் படத்திற்கு மாலை அணிவித்து நினைவேந்தல் உரை: குடந்தை தமிழினி (மாநிலச் செயலாளர், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை, விசிக), * பெரியார் பெருந்தொண்டர் இரா.கோதண்டபாணி அவர்களின் நினைவு நாள் வீர வணக்க உரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழி வாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: செ.சி.கண்மணி * குறிப்பு: நிகழ்ச்சி தொடக்கத்தில் திண்டுக்கல் ஈட்டி கணேசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும்.

24.8.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * துவக்கயுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்), * சிறப்புரை: முனைவர் மஞ்சுளா (தமிழ்த்துறை பேராசிரியர், சென்னை சமூகப் பணி கல்லூரி, எழும்பூர்) * தலைப்பு: புரட்சிக்கவிஞர் – தந்தை பெரியார் (ஓர் பார்வை) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *