செய்திச் சுருக்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

எச்சரிக்கை…

கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ் போன்ற தென்கிழக்கு நாடுகளுக்கு டேட்டா என்ட்ரி வேலைக்கு செல்லும் இளைஞர்களை விழிப்புடன் இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திடும் மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 90 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு தமிழ்நாடு முழுவதும் வருகிற 13ஆம் தேதி நடக்கிறது.

வாய்ப்பு

மேற்குத் திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 13ஆம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்.

விழிப்புணர்வு ஏற்படுத்த…

தமிழ்நாட்டில் விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

நீர்நிலைகளின்…

கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் நீர்நிலைகளின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும் என உள்ளாட்சி அமைப்புக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

அனுமதி

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில், தொகுப்பூதிய அடிப்படையில் 105 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

காப்பீடு

ஒன்றிய சுகாதாரத் துறையின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரையும் கொண்டு வரவும், காப்பீடு தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *