பொதுப் பள்ளிக்கான மாநில மேடை நடத்தும் பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டத்தில் ஜாதி ஒழிப்பிற்கான பாடம் – ஒரு நாள் பணிமனை

Viduthalai
2 Min Read

9.7.2024 செவ்வாய்க்கிழமை
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை நடத்தும் பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டத்தில் ஜாதி ஒழிப்பிற்கான பாடம் – ஒரு நாள் பணிமனை
சென்னை: காலை 10 மணி * இடம்: பாரம்பரியக் கட்டடம், கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், அண்ணா சாலை, சைதாப்பேட்டை, சென்னை * தலைமையுரை: முனைவர் பி.இரத்தினசபாபதி (தலைவர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை) * தொடக்கவுரை: முனைவர் எஸ்.ராஜா சாமுவேல் (முதல்வர், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்) * சிறப்புரை: முனைவர் என்.ராமகிருஷ்ணன் (பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்) * நோக்கவுரை: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை) * பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டத்தில் ஜாதி ஒழிப்புப் பாடம் இடம் பெறுதலுக்கு உண்டான வழிமுறைகளை ஆராய்ந்து தக்க பரிந்துரைகளை வழங்க ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வி பெறுவோர், துறை சார்ந்த வல்லுநர்கள், கலவியியல் செயல்பாட்டாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் பணிமனை.

தஞ்சாவூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூர்: மலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜ வீதி, தஞ்சாவூர் * தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) * பொருள்: நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து இரு சக்கர வாகனத்தில் பரப்புரை பயணம் மற்றும் கழக ஆக்கப் பணிகள் * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மண்டல, மாவட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் * இவண்: அ.அருணகிரி (மாவட்ட கழக செயலாளர்).

10.7.2024 புதன்கிழமை
தமிழ்நாடு மூதறிஞர் குழு சிறப்புக் கூட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * வரவேற்புரை: முனைவர் த.கு.திவாகரன் (பொருளாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) * தலைமை: முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் (தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) * சிறப்புரை: ஆர்.பூரணலிங்கம் (அய்.ஏ.எஸ். பணி நிறைவு) * தலைப்பு: மருத்துவக் கல்லூரிக்கு தேவையில்லாத நீட் * நிறைவுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: என்.ஜெயராஜ் (செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு மூதறிஞர் குழு).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *