கங்கையில் குளித்து பசுவிற்கு பூஜை செய்தால் காணாமல் போய்விடுமாம் ‘நீட்’ முறைகேடுகள்!

2 Min Read

அமாவசை கழித்து என்னைக் கைது செய்திருந்தால் எனது குற்றங்கள் அனைத்தும் காணாமல் போயிருக்கும் என்று நீட் வினாத்தாள் மோசடியில் ஈடுபட்ட பெண் புலம்பியுள்ளார்.

சிபிஅய் நீட் தேர்வு வினாத்தாள் மோசடி தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது, ராஜஸ்தானில் இதுவரை 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் ஆள் மாறாட்டத்திற்கு ஏற்பாடு செய்ய தனிக்குழுவையே நியமித்துள்ளார்கள் மோசடிக்காரர்கள். அந்த ஆள்மாற்ற ஏற்பாட்டு குழுவிற்கு ரூ.40 லட்சம் வரை கொடுத்துள்ளனர். அந்த மோசடிக்குழுவில் உள்ள ஒரே பெண்ணான ஷிம்மி பிஸ்னோயி என்பவர் – இவர் அரசுப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

இந்த ஷிம்மி பிஸ்னோயி ஏற்கெனவே ராஜஸ்தானில் நடந்த காவல்துறை ஆய்வாளர் தேர்விற்கான வினாத்தாள் மோசடியிலும் ஈடுபட்டதற்காக கைதாகி பிணையில் உள்ளார். இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் மோசடியிலும் இவர் ஈடுபட்டுள்ளதால் இவரை காவல் துறையினர் கைது செய்யச் சென்றனர்.

இவர் காவல்துறை உயரதிகாரி போல் ஆடை அணிந்து உத்தரப்பிரதேசத்திற்கு தப்பிச் சென்றுவிட்டார். இதனை அடுத்து இவரைப் பிடித்துக்கொடுக்க ராஜஸ்தான் காவல்துறை ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசுத் தொகையாக அறிவித்தது. மோசடிக் கும்பலின் ஆதரவில் தலைமறைவாக இருந்த இவர் வாரணாசியில் உள்ள பசுமாட்டு காப்பகத்திற்குச் சென்று பசுமாட்டிற்குப் பூஜை செய்துகொண்டு இருக்கும் போது ராஜஸ்தான் காவல்துறை இவரைக் கைதுசெய்தது.

வாரணாசிக்குச் சென்று கங்கையில் குளித்துவிட்டு பசுமாட்டிற்கு அமாவாசை வரை தொடர்ந்து வெல்லமும், ரொட்டியும் கொடுத்து பூஜை செய்துவந்தால் மோசடி குற்றச்சாட்டில் இருந்து பெயர் விலகிவிடும் என்று சாமியார் ஒருவர் கூறியதை அடுத்து அவர் வாரணாசி வந்து தொடர்ந்து கங்கையில் குளித்து பசு மாட்டிற்கு பூஜை செய்து கொண்டிருந்தபோது கைதானார்.

கைதுக்குப் பிறகு இவர் கூறியதாவது: “நான் ஸநாதன தர்மத்தில் தீவிரமான பற்றுக் கொண்டவள். ஆகவே பக்தியோடு கங்கையில் குளித்துவிட்டு பசுவிற்கு பூஜை செய்துவருகிறேன். அமாவாசைக்கு இன்னும் ஒரு நாள் தான் உள்ளது (05.07.2024) அதற்கு முன்பே என்னைக் கைது செய்துவிட்டார்கள்.

அமாவாசை முடிந்த பிறகு என்னைக் கைது செய்து இருந்தால் என் மீது இருந்த குற்றச் சாட்டுகள் பொய்யாகி இருக்கும்.” இவரது இந்தப் பேச்சைக் கேட்டு காவல் துறையினரே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஞாயிறு மலர்

முக்காடில் இருக்கும் இந்தப் பெண் செய்த செயலால் காவல் துறையே விக்கித்துப் போயுள்ளது என்று நியூஸ் 18 என்ற ஹிந்தி செய்தி ஊடகம் தலைப்பு கொடுத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *