சென்னை அய்.அய்.டியில் நடைபெற்ற NPTEL தென்னிந்திய வளாக மய்யங்களுக்கான பயிற்சிப் பட்டறை மற்றும் பாராட்டு விழாவில், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் “Aspirant Local Chapter” என்ற அய்.அய்.டி யின் சிறந்த இணையவழி கல்வி வளாகத்திற்கான பாராட்டை பெற்றது. பல்கலைக் கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஆ.முத்தமிழ்ச் செல்வன் அதற்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பட்டயத்தை பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார். அருகில் பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ. அன்புராஜ். (சென்னை – 2.7.2024)