மாநிலக் கட்சிகளை அழிக்கும் பிஜேபி ஓர் ஒட்டுண்ணி – மோடிக்கு காங்கிரஸ் பதிலடி!

1 Min Read

புதுடில்லி, ஜூலை 5 மாநில கட்சிகளை அழிக்கும் பாஜதான் ஒரு ஒட்டுண்ணி என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் டில்லியில் நேற்று (4.7.2024) அளித்த பேட்டி:
2024 தேர்தல் முடிவு மோடிக்கு தீர்க்கமான, அரசியல் மற்றும் தனிப்பட்ட தார்மீக தோல்வி. ஆனால் மோடி அதை உணர்ந்ததாக தெரியவில்லை. நாடாளுமன்றத்துக்கு வௌியே ஒருமித்த கருத்துகளுக்கு அழைப்பு விடுக்கும் மோடி, அவையில் மோதல்களை உருவாக்குகிறார்.
அவர் தன் தோல்வியை உணர்ந்து மாறியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் அதேசமயம் எதிர்க்கட்சிகள் புதிய, ஆக்ரோஷமான செயல்பாடுகளை வௌிப்படுத்தின. இந்த ஆட்சி கூட்டணி கட்சிக்கான ஆணை, மக்களை ஒன்றிணைத்து அழைத்து செல்வதற்கான ஆணை, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத மற்ற அனைத்துக் கட்சிகளின் பேச்சையும் கேட்பதற்கான ஆணை என்பதை மோடி அரசு உணர வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஜெய்ராம் ரமேஷ், “காங்கிரசை ஒட்டுண்ணி என மோடி சொல்கிறார். ஓர் ஒட்டுண்ணியால் மட்டுமே அந்த வார்த்தையை சொல்ல முடியும். பாஜவின் சாதனைகளை எடுத்து பார்த்தால் அது மாநில கட்சிகளை எப்படி சாப்பிட்டது என்பது புரியும். அந்த வரிசையில் தற்போது பிஜூ ஜனதா தளம் உள்ளது. தேர்தல் பிரச்சாரம் முழுவதும் உயிரியல் சாராத பிரதமரும், அவரது சகாக்களும் வெறுப்பு, மதவெறி, வன்முறை பேச்சுகளை பேசினர். மோடியின் 3.0 அரசு நீடிக்காது” என்று காட்டமாக தெரிவித்தார்.
ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் “பஞ்சாப், அரியானா பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்து போட்டியிடாது. டில்லி பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி ஏற்கனவே தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா பேரவை தேர்தலில் உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திரபவார்) கட்சிகளுடனும், ஜார்க்கண்ட் பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடனும் காங்கிரஸ் கூட்டணி வைத்து போட்டியிடும்” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *