பந்தலூர், ஜூலை 3- கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள் ளத்தால் சூழப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய 48பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பந்தலூர் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மாவட்டத்தில் 1.7.2024 அன்று காலை வரை பதிவான மழை நிலவரம்: பந்தலூர் 62 மி.மீ., கூடலூர் 45, கீழ் கோத்தகிரி 31, தேவாலா 46, சேரங்கோடு 128, அவிலாஞ்சி 18, பாடந்துறை 134, ஓவேலி 39, அப்பர் பவானி 16, செருமுள்ளி 133 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.பாடந்தொரை பகுதியில் பெய்த கனமழையால் ஆலவயல் சாலை, கனியம்வயல் சாலைகளில் வெள் ளம் சூழ்ந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. பாடந்துறை பகுதியில் உள்ள ஆவின் பால் கொள்முதல் நிலையம் முற்றிலுமாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் பணியாளர் கள் பால் கேன்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பந்தலூர் பகுதியில் பெய்த கனமழையால் பந்தலூர் பஜார் பகுதியில் சாலைகள் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டு ஆறு போல காட்சியளிக்கிறது. அதனால் பந்தலூர் பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தேவாலா-கரியசோலை சாலையில் பில் லுக்கடை அருகே ஏற்பட்ட மண் சரிவால் அந்த சாலை துண்டிக் கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கையும் தொடர்கிறது. இந்நிலையில், கூடலூர், பந்தலூர் தாலு்காக்களுக்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: பந்தலூரில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. 50 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். மேலும் பல முகாம் கள் அமைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூடலூர் அருகே இரு வயல் என்ற பகுதியில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 9 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், மக்கள் வீடுகளில் தங்க இயலாத நிலை ஏற்பட்டது. கூடலூர் நிலைய அலுவலர் (பொ) சங்கர் தலைமையில் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.