இலங்கையின் வெகு நீண்ட கால எதிர்க்கட்சித் தலைவராகவும், ஈழத் தமிழ்ப் பெருமக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவரும், ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் போராடிய இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மதிப்புமிகு இரா. சம்பந்தன் அவர்கள் தனது 91ஆம் வயதில் நேற்று (30.6.2024) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களையும், நம்மையும் சந்திக்கத் தவறியதே இல்லை.
எந்த நிலைப்பாட்டிலும், விவாதங்களிலும் நிதானமான போக்கை கடைப்பிடித்தொழுகிய தொண்டறச் செம்மல், மாமனிதர்!
அவரது மறைவு ஈழத் தமிழர்களுக்கு மட்டும் பெரும் இழப்பு அல்ல; சீரிய நீண்ட பொது வாழ்வில் எடுத்துக்காட்டான அவரை மதிக்கும் பிற நாட்டுத் தமிழர் சமூகத்தினருக்கும் பெரும் இழப்பாகும்!
அவரது தமிழரசுக் கட்சிக்கும், குடும்பத்தி னருக்கும் ஆறுதலையும், நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது வீர வணக்கம்!
கி.வீரமணி
சென்னை தலைவர்
1.7.2024 திராவிடர் கழகம்