நீட்: ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை! ராகுல் காந்தி வலியுறுத்தல்!

1 Min Read

புதுடில்லி, ஜூன் 29 நீட் தோ்வு முறைகேடுகள் குறித்து நாடாளு மன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் என அனைவரும் ஆக்கபூா்வமான விவாதம் மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும் என பிரதமா் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் நேற்று (28.6.2024) வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்து அவா் பேசியதாவது:

பல லட்சம் மாணவா்கள் மிகுந்த மனவேதனையுடன் உள்ளனா்
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்துக்கு முன்பு நீட் முறைகேடுகள் குறித்தே முதலில் விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும். நீட் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியாமல் பல லட்சம் மாணவா்கள் மிகுந்த மனவேதனையுடன் உள்ளனா்.
நம் நாட்டு இளைஞா்களின் எதிர்காலத்தோடு தொடா்புடைய இந்த விவகாரத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கபூா்வமான விவாதத்தை மேற்கொள்ள பிரதமா் மோடி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீட் குறித்து நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக விவாதம் நடத்த வேண்டும் என 27.6.2024 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த கட்சிகள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம் என்றார்.

நாடாளுமன்றத்தில் அனுமதி மறுப்பு!
நீட் விவகாரம் குறித்து தன்னை பேசவிடாமல் தடுத்ததாக ராகுல் காந்தி காந்தி தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் காணொலி ஒன்றை பதிவிட்டார்.
அதில் பேசிய அவா்,‘கடந்த 7 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் கசிந்துள்ளன. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதில் ஏற்கெனவே பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தை கண்டுகொள்ளமால் விடும்பட்சத்தில் முறைகேடுகள் தொடா்ந்து கொண்டே இருக்கும். இந்தப் பிரச்சினைக்கு விரைந்து தீா்வுகாண இளைஞா்கள் போராடி வருகின்றனா். ஆனால், விவாதம் மேற்கொள்ள பிரதமரும், ஒன்றிய அரசும் தயாராக இல்லை. நாங்கள் அரசாங்கத்தை எதிர்த்து சண்டையிடவில்லை. எங்களின் கருத்துகளை எடுத்துரைக்கவே முனைகிறோம்’ என்று தெரி வித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *