காவிரியில் கருநாடக அரசு தண்ணீர் திறக்கும் பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மனு மீது இன்று விசாரணை

Viduthalai
2 Min Read

அரசியல்

பெங்களூரு, ஆக. 25- காவிரியில் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க‌ப்பட்ட‌தை கண்டித்து கருநாடகாவில் விவசாய அமைப்பினர் நேற்று (24.8.2023) போராட்டம் நடத்தினர். காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதித் தீர்ப்பின்படி கருநாடகா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்தது. 

இதேபோல காவிரி மேலாண்மை ஆணையத்திலும் முறையிட்டது. இதையடுத்து தமிழ்நாட்டிற்கு தினமும் 10 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுமாறு கருநாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டது.

நேற்று கருநாடக அரசு கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து 11,788 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 4,138 கன அடி நீரும் திறந்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருநாடக மாநில‌ விவசாய சங்கத்தினர் மண்டியாவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் விவசாய சங்க தலைவர் குர்பூர் சாந்தகுமார், ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் முக்கிய அமைச்சர் சந்துரு உள்பட நூறுக்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர். அப்போது  தமிழ் நாடு அரசு மற்றும் கருநாடக அர சுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர்.

இதனிடையே கிருஷ்ணராஜசாகர் அணை அமைந்துள்ள சிறிரங்கபட்ணா வில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

அப்போது தமிழ்நாட்டிற்கு திறக்கப் படும் காவிரி நீரை உடனடியாக நிறுத்து மாறு முழக்கம் எழுப்பினர். போராட் டக்காரர்களை காவலர்கள் ஆற்றில் இருந்து தூக்கி சென்று கைது செய்தனர். விவசாயிகளின் தொடர் போராட் டத்தை தொடர்ந்து கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளை சுற்றி பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.

வழக்கு விசாரணை

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசார ணைக்கு வருகிறது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய தனி அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. இந்நிலையில் கருநாடக அரசு தமிழ்நாடு அரசின் மனுவுக்கு நேற்று பதில் மனு தாக்கல் செய்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *