புதுடில்லி, ஜூன் 26- குஜராத், பீகார் மாநிலங்களை மய்யமாக வைத்தே நீட் மோசடிகள் அரங்கேறி இருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் மனோஜ்குமார் ஜா குற்றம்சாட்டியுள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மனோஜ்குமார் ஜா வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,
நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறு படிகள் அனைத்தும் குஜராத், பீகார் மாநி லங்களை மய்யமாக வைத்தே அரங்கேறி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் பீகாரில் பா.ஜ.க. அய்க்கிய ஜனதா தள கூட்டணி அரசு நீட் முறை கேட்டில் தொடர்புடைய குற்றவாளி களை பாதுகாப்பதாகவும் புகார் தெரி வித்துள்ளார்.
பல்வேறு முறைகேடுகள் அரங்கேறிய இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனோஜ்குமார் ஜா வலியுறுத்தியுள்ளார்.
ஒன்றிய அரசு மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட முடியாது என்று தெரிவித்துள்ள அவர், தேசிய தேர்வு முகமை ஒரு மோசடி நிறுவனம் என்றும், அந்த அமைப்பு கலைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஒன்றிய அரசால் வினாத்தாள் கசிவின்றி ஒரு தேர்வைக்கூட நடத்த முடியாது என்றும், ஒன்றிய அரசு முழுமையாக தோல்வி அடைந்து விட்ட தாகவும் விமர்சித்துள்ளார்.
மேலும், நீட் தேர்வு குளறுபடி களுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அரசு, மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மனோஜ்குமார் ஜா தெரிவித்துள்ளார்.