லக்னோ, ஜூன் 25- தேர்வுகளை ரத்து செய் வதற்கு பதிலாக பாஜக அரசை ரத்து செய்யலாம் என மக்கள் சொல்வதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் தெரி வித்தார்.
நெட், முதுநிலை நீட் தேர்வுகளை ஒன்றிய அரசு ஒத்திவைத்த நிலையில் அகிலேஷ் இந்த கருத்தைக் குறிப்பிட்டார்.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக் கிழமை (23.6.2024) நடைபெறவிருந்த நிலையில், அத்தோ்வு ஒத்தி வைக்கப்படுவதாக ஒன்றிய அரசு சார்பில் அறிவிக்கப் பட்டது.
நீட், நெட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெற்ற தாக சா்ச்சைகள் நீடித்து வரும் நிலையில், முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை நீட் தோ்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அகிலேஷ், தேர்வுகளை ரத்து செய்வதற்கு பதிலாக பாஜக அரசை ரத்து செய்வதே நல்லது என மக்கள் நினைப்பதாகப் பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வில் வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் பீகார் குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற் போது ஒன்றிய குற்றப் புலனாய்வுப் பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.