சென்னை, ஆக. 26 – சென்னை கத்தீட்ரல் சாலையில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்பதற்கான ஆலோசகரைத் தேர்வு செய்வதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கத்தீட்ரல் சாலையில் அரசு தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமாக 23 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலம் கடந்த 1910இ-ல் தோட்டக்கலை சங்கத்துக்கு வழங் கப்பட்டது.
ஆனால் காலப்போக்கில், இந்த நிலம் தனியார் ஆக்கிரமிப்புக்கு மாறியது.
கடந்த 1989ஆ-ம் ஆண்டு அப் போதைய முதலமைச்சர் கலைஞர், 17 ஏக்கர் நிலத்தை மீட்டார். இதை யடுத்து, அப்பகுதியில் செம் மொழிப் பூங்கா கடந்த 2009இ-ல் உருவாக்கப்பட்டது. மீதமுள்ள நிலம் தோட்டக்கலை கிருஷ்ண மூர்த்தி என்பவரிடம் இருந்தது.
இந்நிலையில், திமுக ஆட்சி ஏற்பட்ட பின்னர், மீதமுள்ள 6 ஏக்கர் நிலம் கடந்த ஜூன் மாதம் மீட்கப்பட்டது.
இந்நிலையில், கத்தீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்கா அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில், ரூ.25 கோடியில் கலை ஞர் நூற்றாண்டுப் பூங்கா அமைக் கப்படும் என கடந்த ஆக.15ஆ-ம் தேதி சுதந்திர நாள் உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த பூங்காவுக் கான ஆலோசகர்களை தேர்வு செய்வதற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. செப்.18ஆ-ம் தேதி ஒப்பந்தத்துக்கான கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.