புதுடில்லி, ஜூன் 21– டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கி உள்ளது.
இடைக்கால பிணை
டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முதல மைச்சருமான அரவிந்த்கெஜ்ரி வால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அம லாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றக் காவலில் டில்லி திகார் சிறையில் அடைக்கப் பட்டிருந்த கெஜ்ரிவாலுக்கு தேர்தலை யொட்டி உச்ச நீதிமன்றம் கடந்த மே 10ஆம் தேதி இடைக்கால பிணை வழங்கியது.
இந்த பிணைக்காலம் நிறைவடைந்த நிலையில், கடந்த 2-6.2024 அன்று கெஜ்ரி வால் மீண்டும் சிறைக்கு திரும்பினார்.
காவல், நீட்டிப்பு
அதேநேரம் அவர் டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதன் மீது தொடர்ந்து விசா ரணை நடந்து வந்தது.
இதற்கிடையே கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நிறைவ டைந்ததைத் தொடர்ந்து 19.6.2024 அன்று அவர் திகார் சிறையிலிருந்தவாறே டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது கெஜ்ரிவா லின் நீதிமன்றக்காவலை வருகிற 3ஆம் தேதி வரை நீதிபதி நியாய் பிந்து நீட்டித்து உத்தரவிட்டார். அதேநேரம் கெஜ்ரிவாலின் பிணை மனுவையும் 19.6.2024 அன்று அவர் விசாரித்தார். இந்த விசாரணை நேற்றும் தொடர்ந்தது. அப்போது கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கின் குற்றவாளிகளுடன் கெஜ்ரி வாலுக்கு தொடர்பு இருந்ததாக அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்தார். ஆனால், கெஜ்ரிவா லுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை என அவருடைய வழக்கு ரைஞர் தெரிவித்தார்.
நிபந்தனையுடன் பிணை
விசாரணை முடிவில் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கி நீதிபதி நியாய் பிந்து உத்தரவிட்டார். ரூ.1லட்சம் தனிநபர் பத்திரத்தின் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்கினார்.
அதேநேரம் பல்வேறு நிபந்தனைகளையும் நீதிபதி கெஜ்ரிவாலுக்கு விதித்தார். அதாவது வழக்கின் விசார ணையை சீர்குலைக்கவோ, சாட்சிகளிடம் செல்வாக்கு செலுத்தவோ கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணைக்கு ஒத் துழைக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, தேவைப்படும்போ தெல்லாம் நீதிமன்றத்தில் ஆஜராகவும் வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பிணைக்கான பத்திரத்தை கெஜ்ரிவாலின் வழக்குரைஞர்கள் இன்று (21.6.2024) நீதிமன்றத்தில் வழங்குவார்கள் என தெரிகிறது. அதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து வெளியே வருவார்.
நிறுத்தி வைக்க கோரிக்கை
முன்னதாக கெஜ்ரிவாலை பிணையில் விட எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை தரப்பு,மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட சட்ட தீர்வுக்காக இந்த பிணை உத்தரவை 48 மணி நேரம் நிறுத்தி வைக்குமாறும் கேட் டுக்கொண்டது.
ஆனால், அமலாக்கத்து றையின் இந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.
எனவே, கெஜ்ரிவாலின் பிணைக்கு எதிராக அமலாக்கத் துறை விரைவில் மேல் நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்யும் என தகவல் வெளியாகி இருக்கிறது.