கோலாப்பூர், ஆக. 27- தேசிய வாத காங்கிரசில் பிளவு இல்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர் கள் என்றால் அது முழுக் கட்சியையும் குறிக்காது எனவும் சரத்பவார் கூறினார்.
மகாராட்டிராவில் சிவ சேனா ஏக்நாத் ஷிண்டே அணி -பாஜ கூட்டணி ஆட்சி நடக் கிறது. கடந்த ஜூலை 2ஆம் தேதி தேசியவாத காங்கிரசின் முன்னணி தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் மற்றும் 8 சட்ட மன்ற உறுப்பினர்கள் திடீரென ஆளும் கூட்டணி அரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தனர். அஜித் பவார் துணை முதலமைச் சராகவும், மீதி உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்க ளாகவும் பதவியேற்றனர்.
சரத் பவார் தலைமையிலான கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்றது கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள தாக கூறப்பட்டது. சில நாட் களுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே பேட்டியளிக் கையில்,‘‘ கட்சியில் பிளவு எதுவும் ஏற்படவில்லை. அஜித் பவார் கட்சி தலைவராக தொடர்ந்து நீடிக்கிறார்’’ என் றார்.
அது பற்றி சரத் பவாரிடம் கேட்டபோது, ‘‘ஆமாம், அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை’’ என்றார். சில மணி நேரங்கள் கழித்து தான் அவ் வாறு கூறவில்லை என மறுத் தார். இந்நிலையில் சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறுகை யில், ‘‘ கட்சியின் தேசிய தலைவ ராக நான் உள்ளேன். மாநில தலைவராக ஜெயந்த் பாட்டீல் உள்ளார்.தேசியவாத காங்கி ரசில் பிளவு ஏற்படவில்லை. சில சட்டமன்ற உறுப்பினர்கள் கட் சியில் இருந்து பிரிந்து சென்றது உண்மை. சட்டமன்ற உறுப்பி னர்கள் என்றால் முழு கட்சி என்று அர்த்தமாகாது. கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவ்வளவு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’ என்றார்.