கைப்பேசிகளில் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் மூலம் நம்மை யார் தொடர்புகொள்வது? என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளும் வசதியை தொலைத்தொடர்பு நிறுவ னங்கள் சோதனை முயற்சியில் தொடங்கியுள்ளன. மோசடி மற்றும் போலியான அழைப்புகளை தவிர்க் கும் பொருட்டு, அழைப்பவர் எண்ணுடன் அவருடைய பெயரும் காண்பிக்கப்படும் வசதி(சிஎன்ஏபி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, ஒருசில
கைப்பேசிகளில் மட்டுமே இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அனைத்து கைப்பேசிகளிலும் இந்த வசதி படிப்படியாக அறிமுகப்படுத்தப் படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அழைப்பாளர் பெயரை காட்டும் வசதியை(சிஎன்ஏபி) நடைமுறைப் படுத்துவதில் சிக்கல்கள் பல இருப்பதால் இதனை கட்டயப்படுத்தக்கூடாதென தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு வலியுறுத்தி வந்த நிலையில், அரசு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்(ட்ராய்) தொடர்ச்சியாக அளித்து வந்த அழுத்தத் தைத் தொடர்ந்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த சோதனை முயற்சியில் இறங்கியுள்ளன. முதற்கட்டமாக மும்பை மற்றும் அரியானாவில் இந்த வசதி அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளதாக வும், வரும் வாரங்களில் பிற நகரங் களுக்கும் சோதனை முயற்சியின் கீழ், இந்த சேவை விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சியின் முடிவுகள் தொலைத்தொடர்புத் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அதன்பின், நாடு முழுவதும் இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடிக்கப்படுமென தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.