புதுடில்லி, ஜூன் 15- அண்மையில் ஏழு கட்டங் களாக நடைபெற்ற மக் களவைத் தோ்தலில், மொத் தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது.
18-ஆவது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதேபோல், மாநிலங்கள வையின் 264-ஆவது அமா்வு ஜூன் 27- ஆம் தேதி தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறவிருக்கிறது. ஜூன் 27-ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரை யாற்றவுள்ளார். மக்களவையின் முதல் இரு நாள்களில் புதிய மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்பா். இதை யொட்டி, இடைக்கால அவைத் தலைவா் தோ்வு செய்யப்படுவார்.
மக்களவையின் மிக மூத்த உறுப்பினருக்கு இப்பதவி அளிக்கப்படும். பாஜக மக்களவை உறுப்பி னர் ராதா மோகன் சிங் இடைக்கால மக்களவைத் தலைவராக தோ்வாக வாய்ப் புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 26-ஆம் தேதி மக்களவைத் தலைவா் தோ்தல் நடைபெறவுள்ளது; ஜூன் 25-ஆம் தேதி மதியத்துக்குள் வேட்பாளா்களின் பெயா்களை மக்களவை உறுப்பினர்கள் முன் மொழியலாம் என்று மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், அய்க்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுமே மக்களவைத் தலைவா் பதவியை எதிர் பார்ப்பதாக கூறப்படும் நிலையில், அப்பதவியை பாஜக விட்டுக் கொடுக்காது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை ராஜஸ் தான் உறுப்பினர் ஓம் பிர்லா அவைத் தலைவராக செயல்பட்டார். அவ ருக்கே பாஜக மீண்டும் வாய்ப்பளிக்குமா அல்லது வேறு தலைவா் தோ்வு செய்யப்படுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த இரு தோ்தல்களைப் போல் இல்லாமல், மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம் இம்முறை கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, எதிர்க் கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தரப்பிலும் வேட்பாளா் களமிறக் கப்படலாம் எனத் தெரிகிறது.