பஞ்சாபின் மகளுக்கு தீங்கு இழைத்தால் போராட்டத்தில் இறங்குவோம் – விவசாயிகள் எச்சரிக்கை!

1 Min Read

ஜலந்தர், ஜூன் 9- வடமேற்கு மாநிலங்களான பஞ்சாப் மற்றும் அரியா னாவின் தலைநகரமாக விளங்கும் சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல் விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற் பாதுகாப்புப் படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதா கரமாக மாறியுள்ளது.

ஒன்றிய பாஜக அர சின் புதிய வேளாண் சட்டங் களை எதிர்த்து பஞ்சாப் – அரியானா விவசாயிகள் ஆண்டுக்கணக்கில் போராடியது தெரிந்ததே.
இதற்கிடையில் பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசி வருகிறார்.

இதன் காரணமாகவே பெண் காவலர் கங்கா னாவை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து குல்விந்தர் கவுர் உடன டியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு நாடா ளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவரை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குல்விந் தர் கவுருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. பழம்பெரும் நடிகை சாபனா அஸ்மி உள்ளிட்டோர் கங் கானாவுக்கு ஆதரவு தெரி வித்திருக்கும் நிலையில் பல்வேறு பஞ்சாப் விவசாய சங்கங்கள் குல் விந்தர் கவுருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த விவகாரத்தில் குலவுந்தருக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் மாபெரும் அளவில் போராட்டம் நடத் தப்படும் என்று விவ சாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த நிகழ்வுக்கு பிறகு கங்கனா வெளியிட்ட காட் சிப் பதிவில் பஞ்சாபியர்கள் அனைவரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்ற தொனி யில் பேசி மத நம்பிக்கைகளை புண்படுத்தியுள்ளதால் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *