சென்னை, ஜூன் 9- அ.தி.மு.க-பா.ஜனதா கூட் டணி தொடர்பாக மேனாள் அமைச்சர் வேலுமணியின் கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பு கிடையாது. வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்ட வட்டமாக தெரிவித் துள்ளார்.
முகாந்திரம் கிடையாது
அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்த லில் மக்கள் வழங்கிய தீர்ப்பை தலைவணங்கி ஏற்க வேண்டும். தேர்தல் என்றால் வெற்றி, தோல்வி சகஜம். தமிழ்நாட்டை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி அ.தி.மு.க.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக மாறும். தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஒரு புள்ளிராஜாவாக (புள்ளி விவரம் பேசுபவர்) மாறிவிட்டார்.
ஒரு அரசியல் கட்சி தலைவராக இல்லாமல், புள்ளிவிவரம் சொல்லும் அய்.பி.எஸ். அதிகாரியாக உள்ளார். அவருக்கு அ.தி.மு.க., குறித்து பேச எந்த முகாந்திரமும் கிடையாது.
கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நின்றது. அப்போது, பா.ஜனதா இப்போது உள்ள கூட்டணியுடன்தான் போட்டியிட்டது. இவர்கள் அப்போது பெற்ற வாக்குகளை விட தற்போது குறைவாகவே வாக்குகளை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து அண்ணா மலை பேச மறுப்பது ஏன்? நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடியை 8 முறை தமிழ் நாட்டுக்கு அழைத்து வந் தார்கள். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை.
கட்சிக்கு தொடர்பு இல்லை
அ.தி.மு.க. வைப்புத் தொகை இழந்ததாக அண் ணாமலை கூறுகிறார். 30 ஆண்டுகள் பல வெற்றி களை குவித்தோம். இனி வரும் தேர்தல்களில் வெற்றியை குவிப்போம். இந்த தேர்தலில், அ.தி.மு.க.வின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.
நாட்டில் பா.ஜனதாவின் மதவாதம், இனவாத அரசியல் எடுபடவில்லை. அயோத்தி ராமன் கோவில் அமைந்துள்ள தொகுதியில் தோல்வி அடைந்துள்ளனர். அங்கேயே வெற்றி பெறாதவர்கள், தமிழ் நாட்டில் எப்படி வெற்றி பெறுவார்கள்?
பா.ஜனதாவால் தமிழ் நாட்டில் காலூன்ற முடி யாது. இது திராவிட அரசியல் மண். இங்கு திராவிட இயக்கங்கள்தான் இருக்கும். அ.தி.மு.க.-தி.மு.க. மட்டும்தான். பா.ஜன தாவை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.
அ.தி.மு.க – பா. ஜனதா இடையே கூட்டணி எப்போதும் கிடையாது என்பதில் நாங்கள் தெளி வாக உள்ளோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது. மேனாள் அமைச்சர் வேலுமணி அ.தி.மு.க – பா.ஜனதா கூட்டணி தொடர்பாக அனுமானத்தின் அடிப் படையில் பேசினார். அவர் கருத்துக்கும். கட்சிக்கும் தொடர்பு கிடையாது.
ஒற்றைத் தலைமைதான்
அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் இடையே முரண்பாடு இருப்பதுபோல் தெரிவது அவர்களின் உட்கட்சி விவகாரம். அ.தி.மு.க.வில் இனி ஒற்றை தலைமைதான். ஒன்றிணைவோம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.
சொத்து வரி, மின் கட்டண உயர்வு உள்பட பல்வேறு கட்டணங்களை உயர்த்திய தி.மு.க.வுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்று கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை.
வாக்களிக்கும்போது மக்கள் யோசித்து வாக் களிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியின் மீதான அதிருப்தி காரணமாக மக்கள் 2026இல் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பார்கள். தமிழ்நாட்டில் பா.ஜனதா காலூன்றும் என்பது நடக்காத விஷயம்.
– இவ்வாறு அவர் கூறினார்.