புதுடில்லி, ஜூன் 9- நீட் தேர்வு முடிவுகுளறுபடி குறித்து சிபிஅய் விசா ரணை நடத்த வேண்டும் என்று இந்திய மெடிக்கல் அசோசியேன் ஜூனியர் மருத்துவர்கள் நெட்வொர்க் வலியுறுத்தி உள்ளது.
நீட் 2024இல் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஜூனியர் டாக் டர்ஸ் நெட்வொர்க் சிபிஅய் விசாரணை நடத்த கோரியுள்ளது.
“அனைத்து மாணவர் களுக்கும் நியாயமான மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு செயல்முறையை உறுதி செய்வதற்காக” ஏற்கெனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என தேசிய தேர்வு முக மையை வலியுறுத்தி உள்ளது.
நடப்பாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஜூன் 4ஆம் தேதி மாலை தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் பல்வேறு குளறு படிகள் நடந்துள்ளதாக மாணவர்களும், பெற்றோர் களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
முதல் மதிப்பெண்ணை (720 மதிப்பெண்கள்) 67 மாணவர்கள் பெற்றிருப்பது மற்றும் தேர்வு மய்யங்களில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து பெற்றோர்களும் மாண வர்களும் கவலை தெரிவித் துள்ளனர்.
குறிப்பாக, அகில இந் திய ரேங்க் 1 மதிப்பெண் பெற்றவர்களில் ஆறு பேர் அரியானாவில் உள்ள ஒரே தேர்வு மய்யத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் வரிசை எண்கள் ஒரே மாதிரி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து ராஜஸ்தானை சேர்ந்த ஒரே மய்யத்தில் இருந்து 720க்கு 720 மதிப்பெண்கள் பெறுவது நீட் தேர்வுத் தாள் கசிந்திருப்பதைக் காட்டுகிறது என்று கூறும் ஆர்வலர்கள், கலந்தாய்வு தொடங்கும் முன், முரண்பாடுகள் குறித்து தேசிய தேர்வு முகமை விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்றும், மறு தேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
பெரும் பரபரப்பை ஏற் படுத்திய இந்த விவகாரம் குறித்து சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜூனியர் டாக்டர்ஸ் நெட்வொர்க் வலியுறுத்தி உள்ளது.
நீட் நுழைவு தேர் வில், “அனைத்து மாண வர்களுக்கும் நியாயமான மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு செயல்முறையை உறுதி செய்வதற்காக” நடைபெற்ற தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர். நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டு புதிய தேர்வு நடத்த மாண வர்கள் வலியுறுத்தல்.
நாடு முழுவதும் 67 பேர் நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். பல இடங்களில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி மாணவர்கள் பிடிபட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.