சீனா எந்த நாட்டுடனும், போரை விரும்பவில்லை! அதிபர் ஜி ஜின்பிங்

Viduthalai
2 Min Read

சான்பிரான்சிஸ்கோ, நவ. 19 – எந்த நாட்டு டனும், நங்கள் போர் செய்ய விரும்ப வில்லை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் சான்பிரான் சிஸ்கோ நகரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (கிறிணிசி) மாநாட்டிற்கு முன்னதாக 17.11.2023 அன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்  மற்றும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோ பைடன்   ஆகியோர் சந்தித்து, இரு நாட்டு உறவுகளை சீராக்குவது குறித்து உரையாடினர்

21 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஆசிய – பசிபிக் பொரு ளாதார ஒத்துழைப்பு குழுவின் ஆண்டுவாரியான உச்சிமாநாடு ஒன்றில், 6 ஆண்டுகளுக்கு பிறகு, இவ்விரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்து உரையாடியது முக்கியத் துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

அமெரிக்கா – சீனா இடையே ஏற்பட்டுள்ள பன்னாட்டு அரசியல் பிரச்சினைகள், சீனா மீதான அமெ ரிக்காவின் பொருளாதார தாக்குதல், பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத் தும் தாக்குதலுக்கு அமெரிக்காவின் ஆத ரவு உள்ளிட்ட பன்னாட்டு அரசியல் சூழலில், இந்த சந்திப்பு நடைபெற்றதால் இருநாட்டு தலைவர்களின் கலந்து ரையாடல் பன்னாட்டு கவனத்தை பெற்றது.

சான்பிரான்சிஸ்கோ செல்வ தற்கு முன்பு வெள்ளை மாளிகையில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப் பில், “நாங்கள் சீனா உடனான உற வில் இருந்து பிரிய முயற்சிக்கவில்லை. நாங்கள் உறவை சிறப்பாக மாற்ற முயற்சிக்கிறோம்”என்று ஜோபைடன் தெரிவித்தார். மேலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு சர்வாதி காரி என்றும் பேசி பைடன் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அமெரிக்க நாடாளுமன்றத் தலைவர் நான்சி பெலோசி 2022 ஆம் ஆண்டு தைவானு க்கு சென்று, தேவையற்ற முறையில் ஒரு சர்ச் சையை கிளப்பினார். அதன்  பிறகு அமெரிக்கா – சீனா இடையே அரசு ரீதியிலான உறவு துண்டிக்கப்பட்டது. தற்போதைய பேச்சுவார்த்தையில் அது புதுப்பிக்கப்பட்டது.

இதையொட்டி, செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீன அதிபர்  ஜி ஜின்பிங், 

“எந்த நாட்டுட னும் நாங்கள் போர் செய்ய விரும்ப வில்லை. நாடு களுக்கு இடையே ஒரு அமைதியான உறவையே விரும்புகி றோம். நாங்கள் அமெரிக்காவிற்கு எதிராகவோ அல்லது அவர்களை போட்டியாள ராகவோ கருத வில்லை. அமெரிக்கா வுடன் நட்புற வைப் பேணவே விரும்புகிறோம்” என்று தெரிவித் தார்.

சீனா எந்த வளர்ச்சி நிலைக்கு சென்றாலும் மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதையோ அல்லது  புதிய திட்டங்களையோ திணிக்காது என்றும், எந்த நாட்டு டனும் பனிப் போரையோ, நேரடி யான ஆயுதப் போரையோ விரும்ப வில்லை என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *