முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 101 ஆவது பிறந்த நாளையொட்டி இன்று (3.6.2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வாரியத் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆம் ஆண்டு பிறந்த நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை வைத்து மரியாதை
Leave a Comment