தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது

2 Min Read

புதுடில்லி, ஜூன் 1 வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு விவாத நிகழ்ச்சிகளில் காங்கி ரஸ் கட்சி சார்பாக யாரும் பங்கேற்க மாட்டார்கள் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா அறி வித்துள்ளார்.
இது தொடர்பாக பவன் கேரா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது: வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை ஏற்கேனவே பதிவு செய்துள்ளனர், அவர்கள் மூலம் தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும். அதற்கு முன்பு, டிஆர்பிக்காக நடத்தப்படும் சண்டைகள் மற்றும் ஊக விவாதங்களில் ஈடுபட எந்த காரணமும் எங்களுக்கு தென்படவில்லை. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள். ஜூன் 4க்கு பிறகு விவாதங்களில் மகிழ்ச்சியுடன் பங்கேற்போம் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி யின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்ப அலையை
தேசிய பேரிடராக அறிவியுங்கள்
ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்
ஜெய்ப்பூர், ஜூன் 1 ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான வெப்பம் காரணமாக பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மாநிலத்தில் வெப்ப அலைக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊடகங்களில், இந்த எண்ணிக்கைக்கு அதிகமாகவே உயிர்பலி நேரிட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தனி நீதிபதி அனூப் குமார் தாந்த் அமர்வு, தமாக இந்த விவகாரத்தை விசாரணைக்கு ஏற்ற நிலையில், வெப்ப அலையையும், மிக மோசமான குளிர்க்காற்றையும் தேசிய பேரிடராக அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது என்று கருத்துத் தெரிவித்துள்ளது. வெப்ப அலையில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டிருக்கும் நீதிமன்றம், மாநில முதன்மை செயலாளர், பல்வேறு துறை அதிகாரிகளை ஒன்றிணைத்து இதற்கான சிறப்புக் குழுவை நியமித்து வெப்ப அலைக்கான திட்டத்தை உருவாக்குமாறும் வலியுறுத்தியிருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *