புவனேஸ்வர், மே 27 ஒடிசா வளங் களைக் கொள்ளையடிக்க தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் இடை விடாது வேலை செய்து வருவதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.
தமிழ்நாட்டினரால் ஒடிசா அரசு நடத்தப்பட்டு வருவதாகவும், அவர் களால் ஒடிசா மாநில சொத்துக்கள் சூறையாடப்பட்டு தமிழ்நாடு செல் வதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசி இருக் கிறார். மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆறு கட்டங்களாக 488 தொகுதி களில் தேர்தல் நடைபெற்று முடிந் துள்ளது. 7 ஆவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் வரும் ஜூன் ஒன்றாம் தேதி 57 தொகுதிகளில் நடைபெறு கிறது.
பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகள், அரியானா மாநிலத்தில் 4 தொகுதி கள், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகு திகள், பஞ்சாபில் 13 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்கம் மாநிலத்தில் 9, சண் டிகரில் ஒரு தொகுதி என 57 தொகு திகளில் தேர்தல் நடைபெறுகிறது.
மேலும், ஒடிசாவில் சட்டப்பேர வைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 4 ஆவது கட்டமாக அங்கு ஜூன் ஒன்றாம் தேதி 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருவதால், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒடிசாவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு கின்றனர்.
ஒடிசாவில் ஆளும் நவீன் பட் நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி யின் மீது எதிர்க்கட்சியான பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட வி.கே.பாண் டியனுக்கு ஒடிசா அரசில் முக்கியத் துவம் அளிக்கப்பட்டுள்ளது குறித்து பாஜக கடுமையாக தாக்கிப் பேசி வருகிறது.
இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று (25.4.2024) ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பாலசூர் உள்ளிட்ட மக்களவைத் தொகுதி களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட் டார். அப்போது பூரி ஜெகன்னாதர் கோயிலின் கஜானா சாவி மாயமாகி இருப்பது பற்றியும், பிஜு ஜனதா தளக் கட்சி பிரமுகர் வி.கே.பாண் டியன் குறித்தும் கடுமையாக விமர் சித்தார்.
ஸ்மிருதி இரானி பேசுகையில், “பிஜு ஜனதா தளம் ஆட்சி, ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மூலமாக இயக்கப்படு கிறது. பிரதமர் நரேந்திர மோடி ஜல்ஜீவன் மிஷன் மூலமாக குடிநீர் விநியோகம் செய்ய நிதிகளை ஒதுக் கினார். ஆனால், தமிழ்நாட்டினர் அந்தப் பணத்தை கொள்ளை அடித் துள்ளனர். இலவச வீட்டு மனைக்காக வழங்கப்பட்ட நிதியும் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக தமிழ்நாட்ட வர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளது. ஒடிசா மாநில வளங்களை கொள்ளையடிக்க சட்டமன்ற உறுப் பினர்கள், அமைச்சர்கள், அவர் களின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழர்கள் இடைவிடாது வேலை செய்து வருகின்றனர்” என்றார்.
மேலும் பேசிய அவர், “பாஜக ஒடிசாவைச் சேர்ந்தவரை முதல மைச்சர் ஆக்கும். ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். குறிப்பாக கடவுள் விரோத செயல்களில் ஈடுபட்டவர் கள் அனைவரும் அதற்கான தண் டனையை அனுபவிப்பார்கள். பூரி ஜெகன்னாதர் கோயிலின் கஜானா சாவி எப்படி மாயமானது? தமிழ்நாட் டவர் ஏன் அதை மறைத்து வைத் துள்ளார்” எனக் கேள்வி எழுப்பி னார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஒடிசா முதல மைச்சர் நவீன் பட்நாயக்கின் வலது கரமான வி.கே.பாண்டியனை விமர் சிக்கும் வகையில் தமிழர்கள் கோவில் சொத்துக்களை திருடுபவர் களாக இருப்பவர்கள், தமிழ்நாட் டைச் சேர்ந்தவர்கள் எப்படி ஒடி சாவை ஆளலாம் எனப் பேசி இருந் தனர். இதற்கு தமிழ்நாட்டிலிருந்து பல தலைவர்கள் கண்டனக் குரல் எழுப்பி இருந்த நிலையில் தற்போது ஸ்மிருதி இரானியும் தமிழர்களை கொள்ளைக்காரர்கள் என்று நேரடி யாகவே பேசியுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கதாகும்.