தேர்தல் ஆணையத்தின் காலங் கடந்த ஞானோதயம் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி மத பேச்சுகளை தவிர்க்க வேண்டும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

1 Min Read

புதுடில்லி, மே 23 “தேர்தல் பிரச் சாரத்தில் நிதானத்தை கடைப் பிடிக்க வேண்டும்” என்று பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் ஜெ.பி.நட்டா மற் றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே எஞ்சி உள்ளன. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத் தில் முன்வைக்கும் பேச்சுக்கள், குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலை வர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தாக்கீது அனுப்பியுள்ளது. அதில் இருகட்சிகளும் நட்சத்திர பேச் சாளர்கள் தேர்தல் நடத்தை விதி களை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மதம் மற்றும் வகுப்புவாத ரீதியில் பிரச் சாரம் செய்வதை தவிர்க்க வேண் டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
பாஜகவுக்கு அனுப்பியுள்ள தாக்கீதில்,

“சமூகத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடிய வகையிலான பிரச்சாரங்களை நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளது. அதே போல் காங்கிரஸுக்கு அனுப்பி யுள்ள தாக்கீரில், “இந்திய அரச மைப்புச் சட்டம் அழிக்கப்படலாம் என்பது போன்ற தவறான கருத் துகளை பிரச்சாரத்தில் சொல்லக் கூடாது. அக்னி வீரர் திட்டம் குறித்து பேசும்போது நாட்டின் பாதுகாப்பு படைகளை அரசிய லாக்கக் கூடாது” என்று கூறியுள்ளது. மேலும், “தேர்தல் பிரச்சாரத் தில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாக்காளர்களின் தேர் தல் பாரம்பரியத்தை பாதிக்கும் வகையிலான பிரச்சாரங்கள் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது” என்று இருகட்சிகளுக் கும் தேர்தல் ஆணையம் கண்டிப்பு காட்டியுள்ளது.

அதேநேரம், இரு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடி யாது என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் நேரத்தில் அதிகாரத்தில் இருக்கும் கட்சி கூடுதல் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும், எதிர்க் கட்சிகளும் வரம்பற்ற வகையில் நடந்துகொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *