செய்திச் சுருக்கம்

viduthalai
1 Min Read

அரசாணை

அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) 4,170 இடங்களுக்கு ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உரிமம் கட்டாயம்

சென்னையில் கால்நடைகளை வளர்ப்போர், அவற்றை முறையாக வீட்டில் கட்டி வைத்து பராமரிக் காமல், சாலைகளில் திரிய விடுவதால், அடிக்கடி விபத் துகள் நடக்கின்றன. இந்நிலையில், சென்னையில் மாட்டுத் தொழுவங்களுக்கு லைசென்ஸ் (உரிமம்) கட்டாயம் என்ற புதிய விதி ஜூன் முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடுவிக்க…

6 மாதங்களாக குவைத் சிறையில் வாடும் 4 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு துறை செயலாளருக்கு தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரவு

அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடங்கியது

அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பின் மதுரை யில் எய்ம்ஸ் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கப் பட்டுள்ளது. மருத்துவமனை கட்டி முடிக்க மேலும் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகும் என்று எய்ம்ஸ் நிருவாக இயக்குநர் தகவல்.

தடையில்லா

மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு கடல்சார் வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய துறைகளிடம் தடையில்லா சான்று பெற்ற பிறகே எண்ணூர் கோரமண்டல உர ஆலையை திறக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.

ஓய்கிறது

மக்களவை 6ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம் 58 தொகுதிகளில் நாளை மாலை முடிவுக்கு வருகிறது. 25ஆம் தேதி அங்கு வாக்குப் பதிவு நடக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *