உ.பி.யில் மாபெரும் மக்கள் கூட்டம் ராகுல் காந்தி – அகிலேஷ் திணறல் இடையில் வெளியேறும் நிலை : ஆதரவு உச்சக் கட்டம்

2 Min Read

லக்னோ, மே 20 ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் இணைந்து ஒன்றாகக் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் பொதுமக்கள் அதிகளவில் திரண்ட தால் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தக் கூட்டத்தில் பேசாமலேயே இரு தலைவர்களும் கிளம்பினர்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாகமக்களவை தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து கட்சி களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி யுள்ளனர். இதில் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இணைந்து இந்தியா கூட்டணி சார்பில் தேர்தலை எதிர்கொள்கின்றன.

குவிந்த தொண்டர்கள்: இதனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் அங்குத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. அதன்படி உத்தரப் பிரதேச மாநிலம் புல்பூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஒன்றாகக் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது. இருப் பினும், இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி தொண்டர்கள் அதிகளவில் குவிந்தனர்.

அப்போது தொண்டர்கள் பலரும் தடுப்புகளைத் தாண்டி மேடைக்கு மிக அருகே திரண்டதால் பரபரப்பு ஏற் பட்டது. இந்தக் கூட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆதர வாளர்கள் திரண்டுள்ளனர். குறிப்பாக அகிலேஷ் யாதவ் மேடைக்கு வந்த போது​​முன்னால் இருந்த கூட்டம் தடுப்புகளைக் கீழே தள்ளிவிட்டு மேடைக்கு அருகே திரண்டுள்ளது. இத னால், அங்கு தள்ளு முள்ளு ஏற்படுவது போன்ற கடுமையான நெரிசல் ஏற் பட்டது.
ராகுல் காந்தி: கொஞ்ச நேரத்திலேயே அதிகப்படியானோர் மேடைக்கு அருகே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப் போது அங்கிருந்தவர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.. இருப்பினும், மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்த நிலையில், ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் அங்குப் பேசாமலேயே கிளம்பினர்.

பாதுகாப்பு அதிகாரிகள் இருவரையும் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதற்கிடையே அங்குப் பெருந்திரளான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்ட நிலையில், இது குறித்த படத்தை ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பூல்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் அமர்நாத் மவுரியாவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்குத் திரண்டிருந்த கூட்டம் குறித்த காட்சிப் பதிவை சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் என இரு தரப்பும் தங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம்: நாட்டிலேயே அதிகபட்சமாக 80 மக்களவை தொகுதி களைக் கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருக்கிறது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் என பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் இங்கு தான் போட்டியிடுகிறார்கள். நாட் டில் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடக் கும் நிலையில், அனைத்து கட்டங்களிலும் உபியில் வாக்குப்பதிவு நடக்கிறது. இது வரை 4 கட்டங்களில் உத்தரப் பிரதேசத் தில் 39 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இன்று 5ஆம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கும் நிலையில், மே 25ஆம் தேதி 14 தொகுதிகளுக்கும் ஜூன் 1ஆம் தேதி 13 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *