மதம் என்பது மூடநம்பிக்கை என உறுதிபடக்கூறிய பெர்ட்ரண்டு ரசல் பிறந்த நாள் இன்று (18.05.1872)

2 Min Read

மதம் என்பது மூடநம்பிக்கை என ரசல் உறுதியாகக் கூறினார்.
மொத்தத்தில் மதம் மனிதர்களுக்கு தீங்குதான் செய்கிறது. மதமும், மத நோக்கும் அறிவு வளர்ச்சியை தடுப்பவை. அச்சத்தையும், சுதந்திரமின்மையும் வளர்க்கிறது. அதனால் போர், துன்பங்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றிற்கு பொறுப்பாகிறது என்றார் ரசல்.
1949-இல் ”நான் நாத்திகனா இறை அய்யம் கொண்டவனா” என்ற உரையில்,

” நான் மரணத்திற்கு பின் வாழ்க்கை இல்லை என்பதை உறுதியாக நம்பினாலும், இரு ஆண்டுகள் கழித்து (1896இல்), கடவுள் உண்டு என நம்பினேன் , ஏனெனில் “முதல் காரணி” வாதம் அழிக்க முடியாததாக தோன்றியது. 18 ஆம் வயதில் கேம்ப்ரிட்ஜ் செல்லும் முன்பு, மில்லின் சுயசரிதையை படித்தேன். அதில் அவர் தந்தை ‘என்னை சிருட்டித்தவர் யார்` என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஏனெனில் அது `கடவுளை யார் சிருட்டித்தது’ என்ற கேள்விக்கு அழைத்துச் செல்லும் எனச் சொல்வதாக படித்தேன். அதிலிருந்து “முதல் காரணி” வாதத்தை கைவிட்டு, நாத்திகனானேன்.
(‘‘பெர்ட்ரண்டு ரசல் – சுயசரிதை – ப 36”)

மேலும், “தருக்கரீதியில் உலகம் 5 நிமிடம் முன்னால்தான் எல்லா இனங்களுடன் தோன்றிற்று, அதில் மக்களும் இல்லாததொரு பழையகாலத்தை “ஞாபகம்” வைத்துள்ளனர் என்று சொல்ல தடயம் ஒன்றும் இல்லை. தருக்க ரீதியில் பல காலங்களில் நடந்த சம்பவங்களுக்கு ஒரு தொடர்பும் இல்லை. இப்பொழுதோ, எதிர்காலத்திலோ நடக்கக் கூடியது அல்லது உலகம் 5 நிமிடம் முன்னாடிதான் ஆக்கப் பட்டது என்ற முன்கோளை, பொய் என நிரூபிக்க முடியாது” என்றும் கூறினார்.
(பெர்ட்ரண்டு ரசல் – “மூளையின் பகுப்பாய்வு” 1921 ப 159-160).

பால்ய பருவத்தில் ரசல் நிரந்தர உண்மைகளுக்காக ஏங்கினார், அவருடைய புகழ்பெற்ற கட்டுரையான “சுதந்திர மனிதனின் துதி” வெளியிடப்பட்டது அதில் இயற்கைக்கு புறம்பான, அமானுஷ்ய நம்பிக்கைகளை வெறுத்தாலும், நான் வாழ்க்கையின் ஆழ்ந்த பொருளைப் பற்றி ஏக்கம் கொண்டுள்ளதாக ஒத்துக் கொண்டார்.”நான் ஏன் கிருஸ்துவன் இல்லை” என்பது பற்றி 6 மார்ச் 1927 இல் பாட்டர் நகர மாளிகையில், தேசிய மதச்சார்பற்ற சங்கத்தின் தெற்கு லண்டன் கிளையில் உரையாற்றினர். ஓராண்டு கழித்து அது வெளிவந்தது. அதில் கடவுள் நம்பிக்கையின் பல வாதங்களை அலசி, கிறிஸ்தவ இறையியல் பற்றியும் பேசுகிறார்.

அவருடைய முடிவு,”மதம், முக்கியமாக அச்சத்தின் மேல் உண்டாக்கப்பட்டது என நினைக்கிறேன். அதன் ஒரு பகுதி நமக்கு தெரியாதவற்றைப் பற்றிய பீதி, மற்றொரு பகுதி நம் பக்கத்தில் ஒரு அண்ணன் இருந்து நம் துக்கங்களிலும் வாழ்க்கை கஷ்டகாலங்களிலும், சச்சரவுகளிலும் ஆதரவு கொடுப்பதாக ஒரு உணர்வு……. ஒரு நல்ல உலகம், அறிவு, கருணை, திடமனம் இவற்றை வேண்டுகிறது. அது கடந்த காலத்தின் மீது பச்சாதாபமுள்ள புலம்பல்களையும், அறிவற்றவர்கள் சொன்ன வார்த்தைகளால் சிறைப்படுவதையும் வேண்டவில்லை” என்பதாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *