தோழர்களே, தோழர்களே! முயல்வீர், முடிப்பீர் இலக்கினை!

Viduthalai
1 Min Read

வரும் ஜூன் முதல் தேதி என்பது தமிழர் களால் மறக்கப்படவே முடியாத உரிமைப் போர் வாளாம் ‘விடுதலை’யின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் (1.6.2024).
ஒரு பகுத்தறிவு நாளேடு 90 ஆண்டுகாலம் ஏறு நடைபோடுகிறது என்றால், அது தந்தை பெரியாரின் வாளும், கேடயமுமான ‘விடுதலை’யே!
‘விடுதலை’யால் பலன் பெற்றவர்கள் தமிழர்களின் ஒவ்வொரு வீட்டிலும் இருப் பார்கள் என்பதை மறுக்க முடியுமா?
தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் ‘விடுதலை’ என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் அருளிய அந்த அரும் வாசகம்தான்எத்தகையப் பொருத்தமானது!
எனவே, தோழர்களே!
‘விடுதலை’ சந்தா சேர்க்கும் பணியை தமிழர்களின் வீடுதோறும் சென்று மேற்கொள்வீர்!
‘விடுதலை’ இன்றேல் கெடுதலையே என்பதை எடுத்துச் செ(£)ல்வீர்!
நன்றியுள்ள நம் மக்கள் கட்டாயம் ‘விடுதலை’ சந்தாதாரர் ஆகிடுவர்!
நம்மால் முடியாதது வேறு யாரால்தான் முடியும்!
முயல்வீர், முடிப்பீர் இலக்கினை!

– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *