புதுடில்லி செப்.8 ஒன்றியத்தில் ஆளும் பாஜகவின் சொத்து மதிப்பு ஓராண்டில் 21.17 சதவீதம் அதிக ரித்து ரூ.6,046.81 கோடியாக உள் ளது ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கத்தின் (ஏடிஆர்) ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இது போல 8 தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பு விவரங்களையும் ஏடிஆர் வெளியிட்டுள்ளது.
தேசிய கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்ட 2020-_2021 மற்றும் 2021_20-22-ஆம் ஆண்டுகளுக்கான சொத்து மதிப்பு விவரங்களை ஆய்வு செய்து இந்த ஆய்வறிக்கையை ஏடிஆர் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது: பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணா மூல் காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகிய 8 தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பு 20202-_2021-ஆம் ஆண்டில் ரூ.7,297.62 கோடியாக இருந்த நிலையில், அது 2021-_2022-ஆம் ஆண்டில் ரூ.8,829.16 கோடியாக உயர்ந்துள்ளது. இதில், பாஜக தேசிய கட்சிகளில் மிக அதிக சொத்து மற்றும் கையிருப்பு நிதியை கொண்டுள்ள கட்சியாக வளர்ந் துள்ளது. இதன் சொத்து மதிப்பு ரூ.4,990 கோடியிலிருந்து 2021-_2022-ஆம் ஆண்டில் ரூ.6,046.81 கோடியாக அதிகரித்துள்ளது. இது 21.17 சதவீத உயர்வாகும். காங்கிரஸ் சொத்து மதிப்பு 2020_20-21-இல் ரூ.691.11 கோடியாக இருந்தது, 16.58 சதவீதம் உயர்ந்து 2021_20-22-இல் ரூ.805.68 கோடியாக அதிகரித் துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் சொத்து மதிப்பு ரூ.732.79 கோடியிலிருந்து, 2021_20-22-ஆம் ஆண்டில் 690.71 கோடியாக குறைந்துள்ளது.
மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு ரூ.182.001 கோடியிலிருந்து 2021-_2022-ஆம் ஆண்டில் ரூ.458.10 கோடியாக அதிகரித்துள் ளது. இது 151.70 சதவீத உயர் வாகும்.
கடன்கள்: கடன்களைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கு அதிக கடன்கள் இருப்பது ஏடிஆர் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இந்த கட்சிக்கு 2020-_2021-ஆம் ஆண்டில் ரூ.71.58 கோடி கடன் இருந்துள்ளது. இதற்கு அடுத்த படியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.16.109 கோடி கடன் இருந்ததாக அறிவித்துள்ளது. 2021-22-ஆம் ஆண்டில் ரூ. 41.95 கோடி கடன் இருந்ததாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதுபோல, மார்க் சிஸ்ட் கட்சி ரூ.12.21 கோடி கடன் இருந்ததாகவும், பாஜக ரூ. 5.17 கோடி கடன் இருந்த தாகவும் அறிவித்தன.
மூலதனம் மற்றும் கையிருப்பு நிதி: சொத்து மதிப்பைப் போலவே, மொத்த மூலதனம் மற்றும் கையிருப்பு நிதி அளவிலும் பாஜக முதலிடம் வகிக்கிறது. இக் கட்சி ரூ. 6,041.64 கோடி மூலதனம் மற்றும் கையிருப்பு நிதியை தன்வசம் வைத் துள்ளது.
காங்கிரஸ் ரூ.763.73 கோடி, மார்க்சிஸ்ட் ரூ.723.56 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ. 15.67 கோடி, தேசிய மக்கள் கட்சி ரூ.1.82 கோடி மூலதனம் மற்றும் கையிருப்பு நிதியை தங்கள் வசம் வைத்திருப் பதாக அறிவித்துள்ளன.
வழிகாட்டுதலைப் பின்பற்ற வில்லை: கடன் விவரங்கள் தொடர் பாக இந்திய கணக்கு தணிக்கை யாளர்கள் நிறுவன வழிகாட்டுதலை தேசிய கட்சிகள் முறையாக பின் பற்றவில்லை என்று ஏடிஆர் அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, வங்கி அல்லது எந்த நிதி நிறுவனத்திடமிருந்து கடன் பெறப் பட்டது, கடன் திரும்பச் செலுத்த வேண்டிய காலம் உள்ளிட்ட விவரங்களை கட்சிகள் வெளியிட வில்லை என்று ஏடிஆர் குறிப்பிட் டுள்ளது.