பரேலி, மே 12– காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல்காந்தி, ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் நிலையில், அங்கு அவருக்கு வாக்கு சேகரித்த காங் கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தேர்தல் பிரச்சாரத்தின்போது மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும் ஜெனரேட்டர் கொடுக்கவும் எவரும் முன்வராத நிலையில் இருட் டில் ஒலிவாங்கி இல்லாமல் கிராம மக்களின் மொபைல் டார்ச் வெளிச் சத்தில் கார் மீது ஏறி நின்று பிரச்சாரம் மேற் கொண்டார்.
உ.பி. மாநலிம் ரேபரேலி தொகுதி யில், காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் போட்டிடுகிறார். ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் வரும் மே 20ஆம் தேதி அதாவது அய்ந்தாவது கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ராகுல் ஏற்கெனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடும் நிலையில், 2ஆவது தொகுதியாக ரேபரேலி தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார். இதையொட்டி, அங்கு கடுமையான தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட் சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் தொடர்ந்து பரப்புரை பணியில ஈடுபட் டுள்ளனர்.
ராகுல் காந்தியை வெற்றி பெற வைக்க அவரின் சகோதரி பிரியங்கா காந்தி தொடர்ந்து கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் தொடர்ந்து இரவு பகல் பாராமல் தெருமுனை கூட் டங்களிலும் பங்கேற்று உரையாற்றி வருகிறார். அந்த வகையில் ரேபரேலி மக்களவை தொகுதிக்குட்பட்ட பச்ரா வன் சட்டமன்ற தொகுதியில் நிகழ்வு நாளன்று இரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திடீரென்று அப்பகுதியில் முழுமை யாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது, உட னடியாக ஜெனரேட்டருக்கு கேட்ட போது யாருமே கொடுக்க அஞ்சி தங்க ளது மொபலை அணைத்து விட்ட னர். இந்த நிலையில் உடனடியாக பிரி யங்கா காந்தி பிரச்சார வாகனத்தின் மீது ஏறி நின்று உரத்த குரலில் பிரச்சாரம் மேற் கொண்டார்.
அந்தப் பகுதி இருட்டாக காணப்பட்ட நிலையில், மக்கள் அனைவ ரும் தங்கள் கையில் உள்ள டார்ச் லைட்டை அடிக்கத் துவங்கியதால் அந்த இடம் நன்றாக வெளிச்சத்திற்குள் வந்தது. இதனை அடுத்து மைக் இல்லாமல் பேசிய பிரியங்கா, “இந்த தொகுதியை சேர்ந்த வாக்காளர்களாகிய நீங்கள் எப் போதும் அரசியல் தளத்தில் நாட்டிற்கே வழி காட்டியுள்ளீர்கள்.
கொள்கைகள் எப்போது தவறாகி றதோ அப்போது அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுகிறீர்கள். இந்த நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி யையே நீங்கள் தோற்கடித்தவர்கள். அதேபோல் எதிரிகளையும் வீழ்த்தியுள் ளீர்கள். இதுதான் உங்களின் வழக்கம். இந்திரா காந்தியும் உங்களிடம் இருந்து தான் தனது பாடத்தை கற்றுக் கொண்டார். நீங்கள் அவரை தோற் கடித்த போது அவர் கோபமடைய வில்லை.
இந்த காலத்தில் பல அரசியல் வாதிகள் செய்வதுபோல் உங்களுக்கு அவர் எந்த தீங்கும் செய்யவில்லை என் றவர், ”இன்று இருக்கும் பிரதமர் மிகப் பெரிய கோழை. அவரிடம் யாராவது கேள்வி கேட்டால் கைது செய்துவிடு வார். அவரை நாடாளுமன்றத்தில் இருந்தே தூக்கியெறிவோம். இன்று விவசாயி வறுமையில் சிக்கித் தவிக்கி றார்கள்.
ஒவ்வொரு பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு பொரு ளும் விலை உயர்ந்துள்ளது” என்றார். அவர் பேசி முடித்து புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில் மீண்டும் அந்தப் பகுதியில் மின்சாரம் வந்துவிட் டது என்பது குறிப்பிடத்தக்கது.