சுயநலப் பற்றினால் பல நம்பிக்கைகள் அமலில் இருந்து வருகின்றன. தற்கால மனோ தத்துவ சாஸ்திரப்படிப் பார்த்தால் இவ்விஷயத்தில் சந்தேகத்துக்கே இடமில்லை. சில விஷயங்களை நம்புவது நமக்கு இலாபகரமாயிருப்பதனாலேயே அவற்றை நாம் நம்பி வருகிறோம். பொது ஜன மதிப்பைப் பெறுவதற்காகவும் நாம் பல விஷயங்களை நம்புகிறோம்; அல்லது நம்புவதாகப் பாவனை செய்கிறோம்.
(‘பகுத்தறிவு’ மலர் 2, இதழ் 5 கட்டுரை 1936)