நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் ராயத்தமங்கலம் கிளைக் கழக கிராமத்தில் ஓடம்போக்கி ஆற்றின் மேல் செல்லும் இரண்டு பாலங்களின் வழியாக அவசர ஊர்தி, லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் கீழ்வேளூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி அவர்கள் நாகை மாவட்ட கழக துணை அமைப்பாளர் ரெ.துரைசாமி மற்றும் கிளை கழக பொருளாளர் ரெ.ராமசாமி ஆகியோரின் கோரிக்கை மனுவை ஏற்று 4.4.2024 அன்று பார்வையிட்டு நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தார். உடன் கிளைக் கழக பொறுப்பாளர் ராமசாமி, திமுக ஒன்றிய பொருளாளர் துரை.பாரதிமோகன், கழகத் தோழர் மாதவன் உள்ளிட்டோர் உள்ளனர்.