இந்தியாவில் 60 விழுக்காடு மக்கள் ‘‘இந்தியா” கூட்டணிக்கு ஆதரவு!

2 Min Read

பாரிஸ் பல்கலைக் கழகத்தில் ராகுல்

அரசியல்

பாரிஸ், செப்.11  பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க.வையும் அதன் கொள்கை களையும் சரமாரியாகத் தாக்கிப் பேசினார். 

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலை வர்களில் ஒருவரும் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

அந்த வகையில், பிரான்சு தலைநகர் பாரிசில் உள்ள INALCO பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, இந்தியாவின் அரசியல் நிலவரம், பா.ஜ.க.வின் செயல்பாடுகள் ஆகியவற்றை கடுமையாக சாடிப் பேசினார். 

இந்தியாவில் ஆளும் அரசு அதி காரத்திற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறது. 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையின்மை விகிதம் மிக அதி களவில் உயர்ந்துள்ளது. இந்து என்று பா.ஜ.க. சொல்லும் எவையும் உண்மை யில் இந்து மதத்தில் இல்லை. தங்களை விட பலவீனமானவர்களை துன்புறுத்த வேண்டும் என இந்து மதத்தில் சொல்லப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் செயல்பாடுகளுக்கும் இந்து மதத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. கீதையை நான் படித்து விட்டேன். என்னிடம் பல உபநிடதங்கள் உள்ளன. பல இந்து புத்தகங்களை படித்து விட்டேன். நாட்டில் மிகப்பெரிய அளவில் சமத்துவமின்மை நிலவுகிறது. ஆட்சி அதிகாரம் தாழ்த்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்தவருக்கு எந்த இடமும் வழங்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட் டோர், ஒபிசி, சிறுபான்மை, பழங்குடியி னர் ஒடுக்கப்படுகின்றனர். எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என நினைக்கின்றனர். நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும். என்று கூறினார். 

தொடர்ந்து மாணவர்களின் பல் வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ராகுல் காந்தி கூறியதாவது:- 

நாட்டில் 60 சதவீத மக்கள் எதிர்க் கட்சிகளுக்குதான் வாக்களித்து இருக் கிறார்கள். வெறும் 40 சதவீதத்தினர் மட்டுமே ஆளும் அரசுக்கு வாக்களித் துள்ளனர். எனவே, பெரும்பான்மை சமூகம் பாஜகவிற்கு வாக்களித்தது என்ற சிந்தனை தவறானது. பெரும் பான்மை சமூகம் உண்மையில் பா.ஜ.க.வைவிட எங்களுக்கே அதிக வாக்குகளை அளித்துள்ளது. 

எந்த ஒரு குரலையும் ஒடுக்கவோ, நசுக்கவோ கூடாது

இந்தியா – பாரத் விவகாரத்தை பொறுத்தவரை அரசியல் அமைப்பில் இந்தியா, பாரத் என இரண்டுமே உள்ளது. மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா அதாவது பாரதம் என இடம் பெற்றுள்ளது. எனவே, இந்த மாநிலங்கள் ஒருங்கிணைந்து இந்தியா அல்லது பாரதத்தை அமைத்துக் கொள்ளலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால் அனைத்து மாநிலங்களின் குரல் களையும் கேட்க வேண்டும். எந்த ஒரு குரலையும் ஒடுக்கவோ, நசுக்கவோ கூடாது” என்றார் அவர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *