காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விவாதிக்க மோடி தயாரா? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறைகூவல்!

1 Min Read

புதுடில்லி, மே 3- வாக்குகளுக்காக பிரதமர் மோடி வெறுப்புணர்வை தூண்டும் வகை யில் பேசி வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.கோடை வெயிலை விட, பா.ஜ.க.வின் கொள்கைகள்தான், நாட்டு மக்களை சுட்டெரிப்பதாக கார்கே விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில்,
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி பொய்யான குற்றச்சாட்டு களை கூறி வருவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள் ளார்.
காங்கிரஸ் கட்சியின்தேர்தல் அறிக்கை குறித்துவிவாதிக்கத் தயாரா? என்றும் பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே சவால் விடுத்துள்ளார். பிரச்சார பொதுக் கூட்டங்களில் வெறுப்புணர்வை தூண் டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார் என்றும், வாக்குகளுக்காக பிரிவினைவாதம் பேசும் பிரதமர்என்றே மோடியை மக்கள் நினைவுகூர்வர் என் றும் கார்கே விமர்சித்துள்ளார்.

ஏழைகளை சுட்டெரிப்பது கோடை வெயில் அல்ல, பா.ஜ.க.வின் கொள்கைகள் தான் ஏழைகளை சுட்டெரிக்கிறது என்று கார்கே கூறியுள்ளார்.
இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர நினைப்பது பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும்தான் என்றும், 1947 முதல் இட ஒதுக்கீட்டை ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்தது ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும்தான் என்றும் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டி யுள்ளார்.

மக்கள் தொகை அடிப்படையில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க பா.ஜ.க. மறுப்பது ஏன்? என்றும் கார்கேகேள்வி எழுப்பி யுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *