பெங்களூர், மே 3 ஒன்றிய பாஜக அரசின் துணையுடன் 300 பெண் களை நாசமாக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை மேனாள் பிர தமர் தேவகவுடாதான் வெளி நாட்டுக்கு தப்பி ஓடவிட்டார் என கருநாடகா முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டி யுள்ளார்.
கருநாடகாவின் ஹாசன் தொகுதி பாஜக கூட்டணி கட்சி யான ஜேடிஎஸ் வேட்பாளரும் நடப்பு நாடாளுமன்ற உறுப்பின ருமான பிரஜ்வல் ரேவண்ணா பல நூறு பெண்களை நாசமாக் கினார் என்பது புகார். பிரஜ்வல் தொடர்பான 2976 ஆபாச காட்சிப் பதிவுகள் கருநாடகாவில் பகிரப்பட்டு வருகின்றன.
பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு எஸ். அய்.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட் டுக்கு தப்பி ஓடிவிட்டார். மேலும் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களை முதலமைச்சர் சித்தராமையா சந்தித்தார். அப் போது பிரஜ்வல் ரேவண்ணாவை மாநில அரசுதான் வெளிநாட் டுக்கு தப்ப அனுமதித்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டுகிறார் களே என சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப் பினர். இதற்கு சித்தராமையா அளித்த பதில்: வெளிநாடு செல் வதற்கு பாஸ்போர்ட், விசா யார் கொடுப்பது? ஒன்றிய அரசு தானே.. ஒன்றிய அரசுக்கு தெரி யாமல் பிரஜ்வல் ரேவண்ணா எம்பி வெளிநாடு சென்றுவிட முடி யுமா? மேனாள் பிரதமர் தேவகவுடா தான் பிரஜ்வல் ரேவண்ணாவை திட்டம் போட்டு வெளிநாட்டுக்கு ஓடவிட்டவர்.
பெண்கள் சக்தி பேசுகிற ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, பிரஜ்வல் ரேவண்ணா போன்ற நபர்களுக்கு சீட் தருவதற்கு ஏன் ஒப்புக் கொண்டாராம்? பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோக்கள் குறித்து ஏற்கனவே பாஜகவுக்கு தெரிந்துவிட்ட பின்னரும் ஏன் ஹாசன் தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டதாம்? பிரஜ்வல் ரேவண்ணா வீடி யோக்கள் குறித்து தெரிந்தும் ஜேடிஎஸ் கட்சியுடன் ஏன் பாஜக கூட்டணி அமைத்தது? இதற்கு எல்லாம் என்ன அர்த்தம்? இது எல்லாம் எதனை வெளிப்படுத்து கிறது? இது குறித்து எனக்கு விளக்கம் தர வேண்டும்.
துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார்தான் வீடியோக்களை வெளியிட்டார் என்கிறார் குமார சாமி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஓட்டுநர் கார்த்திக். பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்களை பாஜகவின் தேவேராஜ் கவுடா விடம்தான் கொடுத்தேன் என்கி றார் கார்த்திக். டிகே சிவகுமாரிடம் கொடுத்தேன் என்றா கூறினார்? அப்படி இருக்கையில் டிகே சிவகுமார்தான் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்களை கசியவிட்டார் என எப்படி சொல்ல முடியுமாம்? தேவேராஜ் கவுடாவே தமக்கு வீடியோக்கள் கிடைத்தது என ஒப்புக் கொண் டிருக்கிறார்.
அதே நேரத்தில் தான் வீடி யோக்களை வெளியிடவில்லை என்றுதான் சொல்லி இருக்கிறார். டிகே சிவகுமாருக்கும் இந்த நிகழ் வுகளுக்கும் எந்த தொடர்புமே இல்லை.
தற்போது சிஅய்டி அதி காரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த விசாரணையின் முடிவில் அனைத்து தகவல்களும் வெளியாகும். சிஅய்டி விசாரணை வெளிப்படையாகவே நடைபெறு கிறது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.