சென்னை, மே 3 யுஜிசி நெட் தேர்வு வரும் ஜூன் 18 ஆம் தேதிக்கு மாற்றப் பட்டுள்ளது. வரும் ஜூன் 16 ஆம் தேதி அன்று ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் 2024-ஆம் ஆண்டுக்கான முதல் நிலை தேர்வு, நடைபெறுகிறது. அன்றே கல்லூரி உதவி பேராசிரியர் பணிக் கான யு.ஜி.சி. நெட் தேர்வும் நடை பெறும் என்று யு.ஜி.சி. அறிவித்திருந் தது. ஒரே நேரத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும், யு.ஜி.சி நெட் தேர்வுக்கும் தயாராகி வந்த தேர்வர்களுக்கு, இது சிக்கலை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் யு.ஜி.சி நெட் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று தேர்வர்கள் யு.ஜி.சி.யிடம் கோரிக்கை வைத்தனர்.
யு.ஜி.சி. அந்த கோரிக்கையை ஏற் றுக் கொண்டு உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி நெட் தேர்வு, ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட யுஜிசி நெட் தேர்வு
Leave a Comment