இந்த தேர்தல் வாழ்வா, சாவா பிரச்சினை – கபட நாடகமாடி மக்களை மோடி ஏமாற்ற முடியாது: கு.செல்வப்பெருந்தகை காட்டம்

viduthalai
1 Min Read

சென்னை, மே 2- இந்திய மக்களுக்கு இந்த தேர்தல் வாழ்வா, சாவா பிரச் சினை. பிரதமர் மோடி கபட நாடகம் ஆடி மக் களை ஏமாற்ற முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந் தகை கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட் டுள்ளதாவது,
நாடாளுமன்ற தேர்தலில் முதல், 2ஆம் கட்டம் முடிந்த நிலையில் மிகுந்த பதற்றத்துடனும், தோல்வி பயத்தாலும் பிர தமர் மோடி ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை பேசி வருகிறார்.
நேற்று (1.5.2024) மும் பையில், நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன் என்று பேசியிருக்கிறார். 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த ஒருவருக்கு இட ஒதுக்கீடுகள் மதத்தின் அடிப்படையில் வழங்கப் படுவது அல்ல என்பது தெரியாதா? சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய மக் கள் எந்த மதத்தில் இருந் தாலும், அவர்கள் எந்த ஜாதியை சார்ந்தவர்க ளாக இருந்தாலும் அந் தந்த மாநில அரசுகள் அமைக்கும் பின்தங்கி யோர் ஆணையம் வழங் குகிற தரவுகளின்படி மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்குகின்றன.
இந்த தேர்தல் இந்திய மக்களுக்கு வாழ்வா, சாவா பிரச்னை. இந்தி யாவின் எதிர்காலமே நாடாளுமன்ற தேர்தல் முடிவை பொறுத்திருக் கிறது. இந்தியாவில் சர் வாதிகார, பாசிச, மக்கள் விரோத ஆட்சி அகற்றப் பட வேண்டுமெனில் பாஜவை தோற்கடிப்பது மிக மிக அவசியம் என மக்கள் உணர்ந்திருக்கி றார்கள். இதன் காரண மாகவே இந்தியா கூட்ட ணியின் வெற்றி நாளுக்கு நாள் உறுதி செய்யப்பட்டு வருகிறது. மோடி எத்த கைய கபட நாடகத்தை ஆடினாலும் கடந்த 2014, 2019இல் மக்கள் ஏமாந்த தைப் போல 2024இல் மக் களை ஏமாற்ற முடியாது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *