சென்னை, ஏப். 30- ‘தமிழ் நாட்டில் மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமராக்கள் எவ்வித பழு துமின்றி முழுமையாக இயங்க வேண்டும். ‘ஸ்ட் ராங் ரூம்’ அமைந்துள்ள பகுதிகளில் டிரோன் உள் ளிட்டவை பறக்க தடை விதிக்க வேண்டும்’ என் பது உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து தமிழ்நாடு தலைமை தேர் தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள் ளது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவை திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ 29.4.2024 அன்று தலை மைச் செயலகத்தில் சந் தித்து மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர் களைச் சந்தித்த அவர் கூறியது:
“நீலகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை வைத்திருக்கக் கூடிய ஸ்ட்ராங் ரூமில் இருக்கும் சிசிடிவி கேம ராக்கள் கடந்த 27ஆ-ம் தேதியன்று 20 நிமிடங் களுக்கு இயங்கவில்லை.
தொடர்ச்சியாக அந்த சிசிடிவி கேம ராக்கள் இயங்கி வந்த தால், மின் இணைப்பு களில் பழுது ஏற்பட்டு சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என்று நீலகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத் தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் ஓர் அறிக்கை கொடுத்திருந்தார்.
எனவே, இதுபோன்ற நிலை தமிழ்நாட்டில் உள்ள மற்ற எந்த தொகு திகளிலும் ஏற்படக் கூடாது என்பதை வலியு றுத்தி திமுக சார்பில் கோரிக்கை மனு ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்திருக்கிறோம்.
குறிப்பாக, தமிழ்நாட் டில் வாக்குப்பதிவு இயந் திரங்கள் வைக்கப்பட் டுள்ள ஸ்டராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் எவ்வித பழுதுமின்றி முழுமையாக இயங்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை நாளன்று அந்த பாது காப்பு அறைகள் திறக்கப் படும் வரை சிசிடிவி கேம ராக்கள் செயல்பட வேண்டும்.
ஸ்ட்ராங் ரூம் தொடர் பான காட்சிப் பதிவுகளை வேட்பாளர்களின் முக வர்கள் கேட்கும்போது வழங்க வேண்டும்.
மேலும், ஸ்ட்ராங் ரூம் அமைந்துள்ள பகுதி களில இருந்து குறைந்தது 500 மீட்டர் தொலைவுக்கு டிரோன் போன்ற கரு விகள் பறப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.
அந்தப் பகுதிகளை No Drone Flying Area என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக் கிறோம்.
இந்த இரண்டு கோரிக்கைகளையும் பரிசீலித்து உரிய நடவ டிக்கை எடுப்பதாக, தமிழ்நாடு தலைமை தேர் தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியிருக்கிறார்” என்று அவர் தெரிவித் துள்ளார்.
இதனிடையே, ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மய்யத்தில் பொருத்தப் பட்டுள்ள கேமராக்களில் ஒன்று பழுதடைந்த சம் பவம் குறித்து ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.