சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் – தனிச்சிறப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம்! திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் செய்தியாளர்களுக்கு பேட்டி

viduthalai
3 Min Read

சென்னை, ஏப்.29 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் என்பது தனிச் சிறப்பாகும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.
இன்று (29-4-2024) புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர் களின் 134 ஆம் ஆண்டு பிறந்த நாள். அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

திராவிடர் கழகம்

அப்பேட்டியின் விவரம் வருமாறு:
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில் இந்த ஆண்டு புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா என்பது கூடுதல் சிறப்பாகும்.
ஒரு காலகட்டத்தில் ‘சுப்பிரமணிய துதி’ பாடிய புரட்சிக் கவிஞர், மயிலாடுதுறையில் தந்தை பெரியார் அவர்களது உரையைக் கேட்டு, மறுமலர்ச்சிப் பெற்று, ‘‘புரட்சிக்கவிஞராக” அவர் மாறினார் என்பது முக்கியமான வரலாறாகும்.

புரட்சிக்கவிஞரின் படைப்புகள்
காலத்தை வென்று நிற்கக்கூடியவை!
அவருடைய படைப்புகள் எல்லாம் காலத்தை வென்று நிற்கக்கூடியன.
‘‘நல்ல இமயம், நலங்கொழிக்கும் கங்கை நதி
வெல்லத் தமிழ்நாட்டின் மேன்மைப் பொதியமலை,
செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள்,
தின்னக் கனிகள், தெவிட்டாப் பயன்மரங்கள்,
இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்
முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன?
செப்பும் இயற்கைவளங்கள் செறிந்தென்ன?
மூடப்பழக்கம், முடிவுற்ற கண்ணுறக்கம்
ஓடுவதன்றோ? உயர்வதென்றோ? நானறியேன்”
என்று எதை எடுத்தாலும், புரட்சிக்கவிஞர் அவர்கள், தந்தை பெரியார் சிந்தனையோடு அளித்திருக்கிறார்.
புரட்சிக்கவிஞரின்
வரிக்கு ஈடாகாது!
தந்தை பெரியாரைப்பற்றி சொல்லு கின்றபொழுது,
‘‘தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்!”
என்றார்.

தந்தை பெரியாரைப்பற்றி எத் தனையோ கவிஞர்கள் பாடியிருந் தாலும், புரட்சிக்கவிஞரின் வரிக்கு ஈடாகாது.
ஆகவே, புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் மறைந்தாலும், அவர் படைத்த சுயமரியாதைக் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம்.
இந்த ஆண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு என்கின்ற முறையில், புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளுக்குத் தனிச் சிறப்பாகும்.
வாழ்க புரட்சிக்கவிஞர்!
வெல்க அவருடைய கொள்கைகள்!
– இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

திராவிடர் கழகம்

மாலை அணிவிப்பு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 134ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2024) காலை 10 மணியளவில் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் தலைமையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பொருளாளர் வீ. குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலாளர் சுப. முருகானந்தம், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ. கோபால், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர் சா. தாமோதரன், சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், பிசி. ஜெயராமன், மடிப்பாக்கம் ஆனந்தராஜ், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், காப்பாளர் கி. இராமலிங்கம், கோ. தங்கமணி, திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், கவிஞர் செல்வ மீனாட்சிசுந்தரம், பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன், பொதுக் குழு உறுப்பினர் சி. வெற்றிச்செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பூவை செல்வி, சீர்த்தி, செ.பெ. தொண்டறம், தங்க. தனலட்சுமி, வி. யாழ்ஒளி, க. கலைமணி, மு. இரா.மாணிக்கம், சோமசுந்தரம், பெ. செந்தமிழ்ச்செல்வன், அம்பேத்கர் மக்கள் முன்னணி தலைவர் திண்டிவனம் சிறீராமுலு, பொதுச் செயலாளர் பிரபாகரன், சஞ்சய், கவின், யுகேஷ் ப. சிவகுமார், திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் இரா. வேதாசலம், பொறியாளர் இராமச்சந்திரன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பேரன் இளமுருகு (சரஸ்வதி கண்ணப்பன் மகன்) விக்னேஷ் ஆகியோர் பங்கேற்று புரட்சிக் கவிஞருக்கு மரியாதை செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *