புதுடில்லி, ஏப்.26- ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. முன்னதாக இந்த வழக்கில், ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து, மேகாலயா உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்தது.
அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒன்றிய அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஒன்றிய அரசு
வழக்குரைஞரின் கருத்து அடிப்படையிலேயே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாகவும், இருப் பினும் தேவையின்றி மேல்முறையீடு செய்ததற்காக அபராதம் விதிக்கப்படுவதாகவும் கூறியது. இது, சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தும் செயல் என்றும் தெரிவித்தது.
நாட்டை உடைக்கும் மோடி பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு
சிறீநகர், ஏப்.26- தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், காஷ்மீர் மேனாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா, சிறீநகரில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “நாட் டின் அரசமைப்பின் கீழ் தேசத்தின் அனைத்து மக்களையும் பிரதமர் பாதுகாக்க வேண்டும். அவர் (பிரதமர்) மக்களை அவர்களின் நிறம், மதம், உணவு அல்லது உடையால் வேறுபடுத்தி பார்க்கக் கூடாது. ஆனால் நமது பிரத மர் (மோடி) நாட்டை உடைக்க முயற்சிக்கிறார். அவர் சமீபத்தில் ராஜஸ்தானில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியது எனக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்தது” என்றார்.