கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.9.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* ஸனாதனத்தை எதிர்த்தால் நாக்கை அறுப்பேன், கண்களைப் பிடுங்குவேன் என ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் வன்முறை பேச்சு.
* புதிய நாடாளுமன்ற பணியாளர்களுக்கு தாமரை பொறித்த சீருடை, காங்கிரஸ் கடும் எதிர்ப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கலிபோர்னியா ஜாதி எதிர்ப்பு மசோதா மீதான விவாதம், அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் மக்கள் தொகையை மாற்றுவதையும், தாயகம் மற்றும் புலம்பெயர்ந் தோரின் அரசியல் சிக்கல்களையும் பிரதிபலிக்கிறது என் கிறார் நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர் அஜந்தா சுப்ர மணியன்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இன்று டில்லியில் நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணியின் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டத் தில் தொகுதி பங்கீடு, பிரச்சார உத்திகள் பற்றி விவாதம் நடைபெறும் என அறிவிப்பு.
தி டெலிகிராப்:
* அரியானா நூஹ் மாவட்ட வன்முறைக்கு காரணமான பஜ்ரங் தள் தலைவர் மோனு மானோசர் கைது.
* முரட்டுத்தனமான தேர்தல் பெரும்பான்மையின் உதவியுடன் புதிய பெயரைத் திணிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. பெயரிடலில் இத்தகைய மாற்றங்களின் உண்மையான தீர்ப்பாளர்கள் மக்களாக இருக்க வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
* வெள்ளம் போல் ஊழல் செய்வதை மறைக்க மோடி ஆட்சி முயல்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு.
* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மாநில அரசை காங்கிரஸ் வலியுறுத்தும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
– குடந்தை கருணா