புதுடில்லி, ஏப்.24 – “இந்திய வரலாற் றில் மோடி அளவுக்கு எந்த ஒரு பிரத மரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை. நாட்டின் 140 கோடி மக்களும் இனி இந்தப் பொய்க்கு இரையாகப் போவதில்லை” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடியை கண்டித்து பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “மோடியின் பீதி நிறைந்த பேச்சு, முதல்கட்ட தேர்தல் முடிவுகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுகிறது என் பதைக் காட்டுகிறது. மோடி பேசியது வெறுப்புப் பேச்சு மட்டுமல்ல, கவனத்தைத் திசை திருப்பும் நன்கு சிந்திக்கப்பட்ட சூழ்ச்சியும் கூட. சங் பரிவார் அமைப்பு களில் கற்றுக் கொண்டதை மோடி தற்போது செய்துள்ளார். அதிகாரத்துக்காக பொய் பேசுவதும், ஆதாரமற்ற விடயங்களைப் பேசுவதும், எதிரிகள் மீது பொய் வழக்குபோடுவதும் ஆர். எஸ்.எஸ். மற்றும்பா.ஜ.க.வின் பயிற்சி யின் சிறப்பு அம்சங்களில் ஒன்று.
இந்திய வரலாற்றில் மோடி அளவுக்கு எந்த ஒரு பிரதமரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்த தில்லை. நாட்டின் 140 கோடி மக்க ளும் இனி இந்தப் பொய்க்கு இரை யாகப் போவதில்லை. எங்களின் தேர்தல் அறிக்கை ஒவ்வொரு இந்திய ருக்கும் சமத்துவம் வழங்குவதை பற்றியும், நீதி வழங்குவதை பற்றியும் பேசுகிறது. ஆனால், கோயபல்ஸ் வடிவில் உள்ள சர்வாதிகாரியின் சிம்மாசனம் இப்போது அசைந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது” என்று மோடியை கடுமையாக சாடியுள்ளார் கார்கே.
தோல்வி பயத்தில் மோடி
ராகுல் கண்டனம்!
இதனிடையே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “முதல்கட்ட வாக்குப் பதிவில் ஏமாற்றம் கிடைத்த பிறகு, பொய்கள் பலன் தராததால் தோல்வி பயத்தில் மக்களை திசை திருப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் பிர தமர் மோடி. காங்கிரஸின் புரட்சிகர தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தி யில் பேராதரவு கிடைத்து வருகிறது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் சவால்!
இதேபோல், மோடியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித் துள்ள காங்கிரஸ் கட்சி,
“இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக் கும் இடையே பிளவை ஏற் படுத்தபா.ஜ.க. முயற்சிக்கிறது. யாருடையசொத்தும் பறிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கை யில் கூறவில்லை. மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது பேச்சில், வளர்ச்சியின் பலன்களில் சிறு பான்மையினர் சமமாக பங்கு பெறும் வகையில் புதுமையான திட்டங்களை தீட்ட வேண்டும் என்றே குறிப் பிட்டார்” என்று தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில்,
“காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்து அல்லது முஸ்லிம் என்ற வார்த்தை எங்காவது எழுதப்பட்டுள்ளதா என்பதை பிரதமர் மோடியால் காண்பிக்க முடியுமா?
அவருக்கு சவால் விடுக்கிறேன். அவரால் காண்பிக்க முடியுமா? இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், பழங்குடியினர் ஆகி யோருக்கான நீதியைப் பற்றி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்” என்று தெரிவித்தார்.