வெயிலின் தாக்கம் அதிகம் வானிலை ஆய்வு மய்யம் மஞ்சள் எச்சரிக்கை!

2 Min Read

சென்னை,ஏப்.24-தமிழ் நாட்டில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
சுட்டெரிக்கும் வெயில்
வழக்கமாக ‘அக்னி நட்சத் திரம்’ என்று அழைக்கப்படும் கடும் கோடை வெயில் கால மான மே மாதத்தில்தான் வெயி லின் உக்கிரத்தை பார்க்க முடி யும்.
ஆனால் இந்த ஆண்டு அதற்கு முன்பே வெயில் சுட்டெ ரிக்கிறது. குறிப்பாக ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, திருப்பத் தூர், திருத்தணி, வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நாள்தோறும் வெப்பத்தின் தாக் கம் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.

வெப்ப அலை வீசக்கூடும்
அந்த வகையில் ஈரோட்டில் 22.4.2024 அன்று மட்டும் இயல் பைவிட 5.5 டிகிரி அதிகமாக வெப்பம் பதிவாகி இருந்தது. அதாவது, 109 டிகிரி வெயில் பதிவானது.
இது இந்த ஆண்டில் 2ஆவது முறையாக அதிகபட்ச வெயில் பதிவானதாக பார்க்கப்படுகிறது. இதுதவிர மற்ற இடங்களில் 105 டிகிரிக்கு மேலும் வெப்பத்தின் அளவு பதிவானது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மேலும் 4 நாட் களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது.
அதிலும் உள் மாவட்டங்க ளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி வரை அந்த பகுதிகளில் வெப்பத்தின் தாக் கம் அதிகமாக பதிவாகும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்போது, அச வுகரியமான நிலை ஏற்படும். இதனால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசிய தேவைகளின்றி வெளியே செல் வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வறண்ட வானிலை
இதற்கிடையே தென் மாவட் டங்கள், வட மாவட்டங்களை யொட்டிய மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், மற்ற இடங்களில் எல்லாம் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மய்யம் அறிவித்து இருக் கிறது.
அதிக வெப்ப அலை வீசக் கூடும் என்பதை உணர்த்தும் வகையில் நேற்று (23.4.2024) சில இடங்களுக்கு ‘மஞ்சள் எச்ச ரிக்கை’ வானிலை ஆய்வு மய்யம் சார்பில் நிர்வாக ரீதியிலான எச் சரிக்கை விடுக்கப்பட்டது.

எதற்காக ‘மஞ்சள் எச்சரிக்கை’?
பொதுவாக மழைக் காலங் களில், கனமழை பெய்யக்கூடிய இடங்களுக்கு நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மய்யம் மஞ்சள் எச்சரிக்கை (அலர்ட்) விடுக்கப் படுவது வழக்கம். அதேபோல், வெயில் காலங்களிலும் ஆய்வு மய்யத்தால் எச்சரிக்கை விடுக் கப்படும். அந்தவகையில் வெயில் காலங்களில் வெப்ப அலையி னால் ஏற்படும் வெப்ப அளவு களை பொறுத்து இந்த எச்ச ரிக்கை விடுக்கப்படுகிறது.
இதில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி வரை வெப்பம் அதி கரித்து காணப்படும் இடங்க ளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், 5 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகக் கூடிய இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்படும்.
அதன்படி, தமிழ்நாடு, கருநா டகா, உத்தரப்பிரதேசம், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை வானிலை ஆய்வு மய்யத்தால் விடுக்கப்பட்டுள் ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *