புதுடில்லி,ஏப்.24- மூன்றாம் கட்ட நாடாளுமன்ற மக் களவைத் தேர்தலில் 1351 பேர் போட்டியிடுகின் றனர். கடந்த 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் நடந்தது. வரும் 26 ஆம் தேதி 2ஆ-ம் கட்ட தேர் தல் நடைபெற உள்ளது.
வரும் மே 7ஆம் தேதி 3ஆ-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அன்று குஜராத் உள் ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதே சங்களில் மொத்தம் 96 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடக்க உள்ளது. நேற்றுடன் இந்தத் தொகு திகளுக்கான வேட்புமனு திரும்பப் பெறுவது முடிந் தது.
இதில் 96 இடங்க ளுக்குப் போட்டியிட 2 ஆயிரத்து 963 பேர் மனு செய்து இருந்தனர்.இதில் வேட்பு மனு பரிசீல னைக்குப் பின்பு 1,563 மனுக்கள் தகுதியானதாக ஏற்கப்பட்டு வேட்புமனு திரும்பப் பெறப்பட்ட பின்பு, இறுதி வேட்பா ளர்கள் பட்டியலைத் தேர்தல் ஆணையம் (23.4.2024) வெளியிட் டது. அதன்படி 3ஆம் கட்ட தேர்தலில் மொத் தம் 1,351 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது.
இவர்களில் மத்தியப் பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் போட்டி யிடும் 8 வேட்பாளர் களும் அடக்கம். அங்கு 2ஆம் கட்டத் தேர்தல் நடைபெற இருந்த நிலை யில், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் இறந்துபோனதால், அந்த தொகுதிக்கு 3-ஆம் கட்ட தேர்தலுடன் சேர்த்து வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.
இதில் அதிகபட்சமா கக் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கு 658 பேர், மற்றும் மகாராட்டி ராவில் 11 இடங்களுக்கு 519 பேர், உஸ்மான்பாத் தொகுதியில் அதிகபட்ச மாக 77 பேர் போட்டியிடுகிறார்கள்.
அடுத்தபடியாக சத்தீஷ்கரின் பிலாஸ்பூர் தொகுதியில் 68 பேர் போட்டியிடுகிறார்கள்.