நாட்டை வேலையில்லாத் திண்டாட்டத்தின் மய்யமாக மோடி மாற்றிவிட்டார்! பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி!

viduthalai
1 Min Read

பகல்­பூர், ஏப்.23 – நாடா­ளு­மன்ற தேர்­த­லில் பா.ஜன­தா­வுக்கு 150 இடங்­கள் கிடைக்­காது எனராகுல் காந்தி கூறி­யுள்­ளார்.
நாடா­ளு­மன்றதேர்­த­லில் போட்­டி­யி­டும் காங்­கி­ரஸ் மற்­றும் இந்­தியா கூட்­டணி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்துகாங்­கி­ரஸ் மூத்த தலை­வர் ராகுல் காந்தி தீவிர பிரச்­சா­ரம் மேற்­கொண்டு வருகிறார். அந்த வகை­யில் பீகா­ரின் பகல்­பூ­ரில் 21.4.2024 அன்று நடந்த பிரச்­சார கூட்­டத்­தில் அவர் உரை­யாற்­றி­னார். அப்­போது பா.ஜனதா மற்­றும் தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணியை கடுமையாக விமர்­சித்­தார்.

தனது உரை­யில் அவர் கூறி­ய­தா­வது:
இந்­திய அர­சி­யல் சாச­னத்­தை­யும், ஜன­நா­ய­கத்­தை­யும் பா.ஜ.க. அழிக்க சதி செய்­கி­றது.
பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்­றும் ஒரு­சில பெரும் பணக்கா­ரர்­க­ளுக்கு எதி­ராக இந்­தியா கூட்­டணிபல­மாக போரா­டு­கி­றது. பிர­த­மர் மோடி­யின் ஆட்­சி­யில்நாட்­டின்70 சத­வீத மக்­க­ளின் வரு­மா­னம் வெறும் ரூ.100 தான். அதே­நே­ரம் மோடி­யின் 10 ஆண்­டு­கால ஆட்­சி­யில் கார்­ப­ரேட் ஜாம்­ப­வான்­க­ளான அம்­பானி மற்­றும் அதா­னிக்கு முழுப் பண­மும் கொடுக்­கப்­பட்டுள் ­ளது.
மேலும் துறை­மு­கங்­கள், சூரிய மின்­சக்தி, சுரங்­கங்­கள், எரி­சக்தி துறை, பாது­காப்பு உள்­ளிட்ட துறை­கள் அதா­னிக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. தேசத்­தின் நிதியை 10 முதல் 13 முத­லா­ளி­க­ளின் கைக­ளில் ஒப்­ப­டைப்­ப­தற்­காக மக்­க­ளின்கவ­னத்தை புத்­திசா சாலித்­த­ன­மாக திசை­தி­ருப்­பும் வகை­யில், சிறு வணி­கர்­களை மோடி பதற்­றத்­தில் ஆழ்த்­தி­னார்.
நடந்து வரும் நாடா­ளு­மன்ற தேர்­த­லில் பா.ஜனதா 400-க்கு அதி­க­மான இடங்­களை பிடிக்­கும்என அந்த கட்­சி­யி­னர் கூறி வரு­கின்­ற­னர். ஆனால் பா.ஜனதா 150 இடங்­களை பிடிப்­பதே கடி­னம். அதற்கு மேல் நிச்­ச­யம் அவர்­க­ளுக்குகிடைக்­காது.

இந்­தி­யாவை வேலை­யில்லா திண்­டாட்­டத்­தின் மய்ய­மாக மோடி மாற்றி விட்­டார். ஆனால் இந்­தியா கூட்­டணி ஆட்­சி­யில் இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு உறுதி செய்­யப்­ப­டும். பட்­ட­தாரி மற்­றும் டிப்­ளமோ பெற்ற இளை­ஞர்­க­ளுக்கு ரூ.8500 மாதாந்­திர உத­வித்­தொ­கை­யில் 1 ஆண்டு பயிற்­சிக்­கான வாய்ப்பு வழங்­கப்­ப­டும்.
-இவ்­வாறு ராகுல் காந்தி கூறி­னார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *