புதுடில்லி, ஏப்.23- முல்லைப்பெரியாறு அணை பகுதியில் மெகா கார் நிறுத்த வழக்கில், இந்திய சர்வே அமைப்பு அளித்துள்ள அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு வலியுறுத்தியது.
மெகா கார் நிறுத்தம்
படகு சவாரி செய்ய தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாக னங்களை நிறுத்துவதற்கு முல் லைப்பெரியாறு அணைப்பகுதியில் மெகா கார் நிறுத்த மய்யம் அமைக்க கேரள வனத்துறை முடிவு செய்துள் ளது.
குமுளி அருகே உள்ள ஆன வாசல் பகுதியில் 2 ஏக்கர் பரப் பளவில் வாகன நிறுத்த மய்யம் அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தது. மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
அறிக்கை தர உத்தரவு
முல்லைப்பெரியாறு அணை பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள கார் நிறுத்த மய்யம் தமிழ்நாட்டிற்கு குத்தகை விடப்பட்ட நிலத்தில் உள்ளதா என்பதை மூன்று மாதங் களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந் திய சர்வே அமைப்புக்கு உத்தரவிடப்படுகிறது.
இந்த சர்வே மேற்கொள்ளப் படும்போது இரு மாநில அதிகாரி களுக்கும் தகவல் தெரிவிக்க வேண் டும் என கடந்த நவம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. கேரளா அரசு திட்டமிட்டுள்ள வாகன நிறுத்த மய்யம் முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதி என சொல்லக் கூடிய, தமிழ்நாடு அரசுக்கு குத்த கைக்கு விடப்பட்ட இடத்தில் இல்லை என இந்திய சர்வே அமைப்பு அறிக்கையில் கடந்த மார்ச் மாதம் தெரிவிக்கப்பட்டது.
பதில் மனு
இதனிடையே, இந்த அறிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடு அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வி.கிருஷ்ண மூர்த்தி, வழக்குரைஞர்கள் ஜி.உமா பதி, டி.குமணன் பதில்மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறப்பட் டுள்ளதாவது:-
கேரளா அரசு திட்டமிட்டுள்ள வாகன நிறுத்த மய்யம் முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதி என சொல்லக்கூடிய தமிழ்நாடு அர சுக்கு குத்தகைக்கு விடப்பட்ட இடத்தில் இல்லை என இந்திய சர்வே அமைப்பு அறிக்கையை ஏற்க இயலாது.
“பெரியாறு-குமுளி கிராமத்துக்கு சர்வே துறை 1924ஆம் ஆண்டு தயாரித்த வரைப்படத்தை இந்திய சர்வே அமைப்பு கணக்கில் கொள் ளவில்லை.
வாகன நிறுத்த மய்யத்துக்கான அசலான தரையின் அளவை ஆய் வில் தீர்மானிக்கவில்லை. கடல் மட்டத்துக்கு மேல் உள்ள அளவில் ஏற்பட்டுள்ள 3 அடி மாறுபாட்டை ஆய்வில் கணக்கில் கொள்ள வில்லை.
இந்திய சர்வே அமைப்பு மேற் கொண்ட ஆய்வு பணியின் தரவு கள் தமிழ்நாடு அரசிடம் பகிர வில்லை.
நிராகரிக்க வேண்டும்
இந்திய சர்வே அமைப்பு உரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வில்லை.
ஆக்கிரமிப்புகள் உள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளின் எல் லையை வரையறுக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
மேற்கண்ட காரணங்களை சுருத்தில் கொண்டு இந்திய சர்வே அமைப்பின் அறிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். அறிக் கையை தயார் செய்தவரிடம் குறுக்கு விசாரணை நடத்த வும் தமிழ்நாடு அரசுக்கு அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
நேற்று (22.4.2024) நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாடு அரசின் மனுவுக்கு பதில் அளிக்க கேரள அரசுக்கு 4 வாரம் கூடுதல் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஜூலை 10-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.